பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

அகநானுர்று - மணிமிடை பவளம்


கலங்களுக்குத் திசை காட்டுவதற்குக் கலங்கரை விளக்கங்கள் அங்கங்கே இருந்த தன்மையும் பெறப்படும்.

256. கனவு பொய்த்தவனின் கதி!

பாடியவர்: மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார். திணை: மருதம், துறை: தோழி தலைமகற்கு வாயின் மறுத்தது. சிறப்பு: கள்ளுரின் வளம் பற்றிய செய்தி

(தலைமகன் பரத்தையின் உறவுகொண்டு வீட்டை மறந்து அலைய, அதனால் தலைவி அவன்மீது ஊடல் கொண்ட வளாயிருந்தனள். ஊரிலோ அவளுடைய ஒழுக்கத்தைக் குறித்து எழுந்த பழிச்சொல்லும் மிகுதியாயிற்று. அதற்கு அஞ்சிய அவன், மீளவும் தன்வீட்டுக்கு வரத் தலைவியின் தோழி இவ்வாறு கூறி, அவனுறவை மறுத்து உரைக்கின்றாள்.)

        பிணங்குஅரில் வள்ளை நீடுஇலைப் பொதும்பின்
        மடிதுயில் முனைஇய வள்உகிர் யாமை
        கொடிவிடு கல்லிற் போகி, அகன்துறைப்
        பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின்
        நுகர்வார் அருந்து மகிழ்பு:இயங்கு நடையொடு 5

        தீம்பெரும் பழனம் உழக்கி, அயலது ஆம்பல்
        மெல்அடை ஒடுங்கும் ஊர!
        பொய்யால்; அறிவேன்; நின் மாயம் அதுவே
        கையகப் பட்டவும் அறியாய்; நெருநை
        மைஎழி உன்கண் மடந்தையொடு வையை 10

        ஏர்தரு புதுப்புனல் உரிதினின் நுகர்ந்து,
        பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது
        கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத்
        தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்,
        கரும்பமல் படப்பைப், பெரும்பெயர்க் கள்ளுர் 15

        திருநுதற் குறுமகள் அணிநலம் வவ்விய
        அறனி லாளன், ‘அறியேன்” என்ற
        திறன்இல் வெஞ்சூள் அறிகளி கடாஅய்,
        முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி
        நீறுதலைப் பெய்த ஞான்றை; 2O

        வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே.

வலிய நகத்தினையுடைய யாமையானது, வள்ளிக் கொடிகள் பின்னிக் கிடக்கும் தூரிலே, நீண்ட இலைச் செறிவுள்ள இடத்திலே, அயர்ந்து கிடந்து உறங்குவதற்கு