பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 291



உள்ளுறை: செல்வதற்குத் தக்க வழியெனக் காட்டிய நெறியும் களிறுகளை உடையதான அச்சமுடைய வழியானலும், கல்லா உமணர் களிறு சுவைத்த சக்கைகளை எரி துரும்பாகப் பயன்படுத்திச் சோறட்டு உண்பர். அதுபோலவே, உடன் போக்கின் நெறி அறத்தோடு பட்டதென்றாலும், அது இடையிடையே இன்னல்கள் பலவும் உடையது; அதனைப் பாராட்டாது செல்லல் வேண்டும் என்றான்.

கரடியின் குட்டியே யானாலும், அதற்கும் பாம்பைப் புரட்டித் தான் விரும்பிய இரையை எடுத்துத் தின்னும் துணிவும் வல்லமையும் இயல்பாகவே உண்டாயிற்று. அது போலவே, வழியின் ஏதங்களைக் கடக்கும் ஆற்றலும் துணிவும், மெல்லியளாகிய அவளுக்கும், பெண்மையின் இயல்பான காதற்கிழமையால் வந்தது என்று கொள்க.

விளக்கம்: காட்டிலே செல்பவர், இன்றும், வழியறிய அடையாளம் இட்டுச் செல்வர். அது, பிறகு வருவார்க்கும் பயனுடையதாயிருக்கும். இந்த மரபு முன்னரும் இருந்தது என்பதைச் சென்னெறி காண்மார் மிசைமரஞ் சேர்த்திய கவை’ என்பது காட்டுவதாகும்.

மேற்கோள்: இச் செய்யுள், கொண்டு தலைக்கழிதற்கண் தலைவன் தலைமகளின் நடையை வியந்தது எனக் கொண்டு தலைக் கழியினும் என்னுஞ் சூத்திர உரையிலே நச்சினார்க்கினியர் காட்டுவர்.

258. ஒலியற்ற மணி!

பாடியவர்: பரணர். திணை: குறிஞ்சி. துறை: அல்ல குறிப்பிட்டுப் பதிப்பெயர்ந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: நன்னன் உதியனின் அருங்கடிப்பாழியிலே வேளிர் காவலாக வைத்த பொன் முதலியன பற்றிய செய்திகள்.

(தன் காதலியைப் பெற்று நுகரலாம் என்ற ஆர்வத்துடனே, இரவுக்குறியிடத்தே பெரிதும் முயன்று சென்று காத்திருந்தும், பல நாட்களும் சென்று, அவளைக் காணாதவனாகிய தலைவன், தன் நெஞ்சிற்குச் சொல்லி இப்படி வருந்துகின்றான்.)

        நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்,
        தொன்முதிர் வேளிர் ஓம்பினர் அறிந்தும், அன்னோள்
        பொன்னினும் அருமைநற்கு அறிந்தும், அன்னோள்
        துன்னலம் மாதோ எனினும், அஃது ஒல்லாய்
        தண்மழை தவழும் தாழ்நீர் நனந்தலைக் 5