பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

அகநானூறு - மணிமிடை பவளம்


        கடுங்காற்று எடுக்கும் நெடும்பெருங் குன்றத்து
        மாய இருள் அளை மாய்கல்போல,
        மாய்கதில்-வாழிய, நெஞ்சே!-நாளும்,
        மெல்இயர் குறுமகள் நல்அகம் நசைஇ,
        அரவுஇயல் தேரும் அஞ்சுவரு சிறுநெறி 10

        இரவின் எய்தியும் பெறாஅய், அருள்வரப்
        புல்லென் கண்ணை புலம்புகொண்டு, உலகத்து
        உள்ளோர்க்கு எல்லாம் பெருநகை யாக;
        காம்ம் கைம்மிக
        ஆனா அரும்படர் தலைத்தந் தோயே! 15

நெஞ்சமே! நீ வாழ்க!

அரிய காவற் சிறப்பை உடையது, நன்னன் உதியன் என் பானுக்கு உரிய பாழிச்சிலம்பு. தொன்மைமிக்க வேளிர்கள் தம்முடைய பொன்னை எல்லாம் அவ்விடத்தே பாதுகாவலுடன் வைத்தனர். அதனைச் சென்று முயன்று அடைவதைக் காட்டினும் அடைவற்கு அருமையானவள் அவள் என்பதை நன்றாக நீ அறிவாய். அறிந்தும், அவளை யாம் நெருங்கவே மாட்டோம் என நான் கூறிய பின்னும், நீ அவற்றிற்கு இணங்காதாய் ஆயினை.

மென்மையான தன்மையுடைய இளைய தலைவியின் நல்ல மார்பகத்தைத் தழுவுதலையே பெரிதும் விரும்பினாய். பாம்புகள் இரைதேடிக்கொண்டிருக்கின்ற அச்சந் தோன்றும் ஒடுங்கிய வழியினை, நாள்தோறும் இராப்பொழுதிலே கடந்தும் சென்றாய். சென்றும் அவளைப் பெறாதாய் ஆகிக் காண்பார்க்கு அருள் தோன்றுமாறு புல் என்ற கண்களையும் உடையையாய்த் தனிமை கொண்டும் வருந்துகிறாய். உலகத்திலே உள்ளவர்களுக்கு எல்லாம் பெரிதும் நகையாடுவதற்கு உரியையும் ஆயினை. காமம் அளவு கடந்து வருத்துதலால், அமையாத அரிய துன்பத்தினையும் எனக்குத் தந்து விட்டனை.

குளிர்ச்சியான மேகங்கள் தவழ்ந்து கொண்டிருக்கும், வீழும் அருவி நீரினையுடைய அகன்ற இடத்திலேயுள்ள, கடுமையான காற்றுச் சுழன்று வீசும், நெடிய பெரிய குன்றத்திலே, மயக்கத்தை விளைவிக்கும் குகையிலே, ஒளியற்றுக் கிடக்கும் மணியைப் போல, நீயும் ஒளிகெட்டு அழிந்து ஒழிவாயாக.

என்று, அல்ல.குறிப்பட்டுப் பெயர்ந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க.