பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 295



சொற்பொருள்: 1. விளங்கின - விளக்கம் பெற்றன; அது தீட்டியும் நெய்பூசியும் போருக்குத் தகுதிப்படுத்துவதனால் அமையும், வினைஞர் - போர் வினைஞர்; ஏவலாளர்களும் ஆம். 4. உலவை இலை - வாடிய இலைகள் 5. குறுமுறி - சிறிய துளிர்கள். 7. பொதுளின - செறிந்தன. 8. பனிநீங்கு வழிநாள். பனிக்காலம் கழிந்த இளவேனிற் காலம். 10. போது வந்தன்று துதே - போது தூதாக வந்தது; அல்லது போதிலே நின் காதலனிடமிருந்து தூதுச் செய்தியும் வந்தது எனவும் கொள்க. 12. தகுவி - தன்மை உடையவளே - 13. தெற்றி - மேடையிலுள்ள பூச்செடிகள். 15, மடவள்! மடமையுடையவள். 18. தோய்க - பொருந்துக.

விளக்கம்: ‘காலம் கூடியிருக்கத் தூதுரைத்து வருகின்றது. நீ அன்னையின் அல்லலையும், தமையன்மாரின் சீற்றத்தையும் எண்ணி, இங்கே கிடந்து நலியாதே; விரைந்து உடன் போக்கிலே சென்றுவிடுக’ என்கிறாள் தோழி.

மேற்கோள்: இவ்வகப்பாட்டுப் போக்குதற்கண் முயங்கிக் கூறியது எனத் தலைவரும் விழும நிலையெடுத்து உரைப்பினும் என்னுஞ் சூத்திர உரையில் நச்சினார்க்கினியர், காட்டுவர்.

260. அன்பிலாளன் அறிவு!

பாடியவர்: மோசிக் கரையனார். திணை: நெய்தல். துறை: இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியது.

(இரவிலே காதலர் கூடுவதற்காகக் குறிப்பிட்டிருக்கும் இடம்; தலைமகளும் தோழியும் பேசிக்கொண்டிருக்கின்றனர். தலைமகன் ஒருபுறமாக மறைந்திருக்கிறான்; தோழியினால் சொல்லெடுக்கப் பட்ட தலைமகள் அப்போது அவளுக்கு இப்படிச் சொல்லுகின்றாள்.)

        மண்டிலம் மழுக, மலைநிறம் கிளர,
        வண்டினம் மலர்பாய்ந்து ஊத, மீமிசைக்
        கண்டற் கானல் குருகினம் ஒலிப்பக்,
        கரைஆடு அலவன் அளைவயின் செறியத்,
        திரைபாடு அவியத், திமில் தொழில் மறப்பச், 5

        செக்கர் தோன்றத், துணைபுணர் அன்றில்,
        எக்கர்ப் பெண்ணை அகமடல் சேரக்,
        கழிமலர் கமழ்முகம் கரப்பப், பொழில்மனைப்