பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 297


செவ்வானம்.7.எக்கர்-மணல்மேடு, 8. முகம் கரப்ப இதழ் குவிய, 12 முரவுவாய் முழங்கும் வாய்.13 கதுமென விரைய.15. அறிவு - அறிவமைந்த உறுதி மொழிகள்.

விளக்கம்: தலைவன், இரவுக்குறியிடத்தே நெடுநேர மாகியும் வராமை காரணமாகத் தலைவி மனம்நொந்து வாடுதலைக் கண்டு, தோழி, தன் உள்ளம் வருந்திக் கூறுகின்றனள். இதற்கு, அன்பிலாளன் அறிவு நயந்தேன்’ எனத் தன் அறியாமையால் அவன் மீது தானும் காதல் கொண்டதைத் தைைல்வி சொல்லுகின்றாள். இனி, அவனை வருந்தியும் பழித்தும் பயனில்லை; அவனுறவே எனக்கு இப்போது வேண்டுவது என்பது குறிப்பு.

மேற்கோள்: ‘எழுத்து முதலா ஈண்டிய அடியில் குறித்த பொருளை முடியக் காட்டுதல்’ என்பதற்கு உதாரணமாக, ‘மண்டிலம் மழுக.குருனிம் ஒலிப்ப’ என்ற பகுதியை, ‘எழுத்து முதலா ஈண்டிய’ என்னும் சூத்திர உரையிலே பேராசிரியர் காட்டுவர்.

‘கண்டல்.ஒலிப்ப, கரையாடலவன். செறிய’ என்பது, “அடிதோறும் முதலெழுத்து ஒன்றி, மோனைத் தொடை வந்தவாறு” என, ‘அடிதோறும தலையெழுத்து ஒப்பது என்னுஞ் சூத்திர உரையிலே பேராசிரியர் காட்டுவர்.

இவ்வடிகளை, அச் சூத்திர உரையிலேயே காட்டி, ‘இது சீர்வகை அடி தொடுத்தது’ என்பார் நச்சினார்க்கினியர்.

பாடபேதங்கள்: நான்கு ஐந்தாவது அடிகள் இடம் மாறிக் கொள்வதும் காணப்படும். 2. மலர் பரந்து ஊதமிசைய. 11. யாங்காகுவல் கொல் யானே.

261. தலை தாழ்ந்தனள்!

பாடியவர்: பாலைபாடிய பெருங்கடுகோ. திணை: பாலை. துறை: புணர்ந்து உடன்போயின காலை, இடைச்சுரத்துப் பட்டதனை, மீண்டுவந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது.

(உடன்போக்கிலே தலைவியுடன்சென்று, தன் ஊரிலே அவளை மணந்தும் கொண்டான் ஒரு தலைவன், பின்னர்த் தலைவியின் வீட்டாரும் மனமாற்றம் பெற்றுவிட, அந்த மண மக்கள் அங்கு மீண்டும் வருகின்றனர்; அவ்வேளையிலே, தனக்கு உதவிய தோழியிடம், தலைவன் தானும் தலைவியுங் காட்டுவழிச் சென்றதனைக் குறித்து இப்படிக் கூறுகின்றான்.)