பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

அகநானூறு- மணிமிடை பவளம்


263. யானே சேர்ப்பேனே!

பாடியவர்: கருவூர்க் கண்ணப்பாளனார். திணை: பாலை. துறை: மகட்போக்கிய தாய் சொல்லியது. சிறப்பு: கோதை என்பான் வஞ்சியைக் காத்து வந்த சீர்மை பற்றிய செய்திகள்.

(ஒரு தலைமகள், தன் உளங்கொண்ட காதலனுடன், அன்னையின் காவலையும் இற்செறிப்பையும் கடந்து உடன் போக்கிலே சென்றுவிட, அதனால் வருந்தியவளாயினாள் அவள் தாய். இப்படி அவள் அவன்மீது அளவற்ற அன்புடையவள் என்பது முன்பே தெரிந்திருந்தால், என் வீட்டிலேயே அவர்களுக்கு மணவினையாற்றி, அவர்களை ஒன்றுபடுத்தி இருப்பேனே’ என்றும் அவள் புலம்புகின்றாள்.)

தயங்குதிரைப் பெருங்கடல், உலகுதொழத் தோன்றி,
வயங்குகதிர் விரிந்த, உருகெழு மண்டிலம்
கயம்கண் வறப்பப் பாஅய், நல்நிலம்
பயம்கெடத் திருகிய பைதுஅறு காலை,
வேறுபல் கவலைய வெருவரு வியன்காட்டு, 5

ஆறுசெல் வம்பலர் வருதிறம் காண்மார்,
வில்வர் ஆடவர் மேலான் ஒற்றி,
நீடுநிலை யாஅத்துக் கோடுகொள் அருஞ்சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு,
அவள் துணிவு அறிந்தனென் ஆயின், அன்னோ! 10

ஒளிறுவேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்னஎன் வளநகர் விளங்க,
இனிதினிற் புணர்க்குவென் மன்னோ-துணிஇன்று
திருநுதல் பொலிந்தவென் பேதை
வருமுலை முற்றத்து ஏமுறு துயிலே! 15


அசையும் அலைகளையுடைய பெருங் கடலினிடையே, உலக மெல்லாம் தொழுது போற்றுமாறு தோன்றி வந்து விளங்குவது, கதிர்கள் விரிந்துள்ள உட்குப் பொருந்திய ஞாயிற்று மண்டிலம். குளங்கள் எல்லாம் வறுமையுற்றுப் போகுமாறு அதுவும் காய்ந்தது; நல்ல விளைநிலங்கள் எல்லாம் தம் வளம் கெடுமாறு அது பகை கொண்டது; பசுமை அற்றுப்போயுள்ள அத்தகைய வேனிற்காலத்திலே,

வேறுபட்டவனவாக விளங்கும் பல்வேறு கவர்த்த நெறிகளையுடைய, அச்சம் வருகின்ற பெரிய காட்டினிடத்தே, வழியோடே செல்லும் புதியவர்கள் வருகின்ற தன்மையினைக் காணும் பொருட்டாக, வில்லாற்றலிலே வல்லமையுடைய