பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

அகநானூறு - மணிமிடை பவளம்



265. எவ்வளவு பெரிதோ?

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை. துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகள் ஆற்றாமை மீதுரத் தோழிக்குச் சொல்லியது. சிறப்பு: பாடலிபுரத்து நந்தர்களின் பெருஞ்செல்வ மெல்லாம் கங்கையின் நீரடியிலே சென்று மறைந்த செய்தி.

(தலைவன் பிரிந்து சென்றனனாக, அதனால் தன் உள்ளம் பெரிதும் கவலையுற, உடலும்வாடித்தன் வனப்பெல்லாம் அழியத் தனிமையுற்று நலிந்தனள் தலைவி. தன் தோழியினிடம் தன்னுடைய ஆற்றாமையின் மிகுதியை அவள் இவ்வாறு எடுத்துக் கூறுகின்றாள்.)

        புகையின் பொங்கி, வியல்விசும்பு உகந்து,
        பனிஊர் அழற்கொடி கடுப்பத் தோன்றும்
        இமயச் செவ்வரை மானும் கொல்லோ?
        பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
        சீர்மிகு பாடலிக் குழிஇக், கங்கை 5

        நீர்முதற் கரந்த நிதியம் கொல்லோ?
        எவன்கொல்? வாழி, தோழி! வயங்கொளி
        நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல்,
        குழற்குரல், பாவை இரங்க, நத்துறந்து,
        ஒண்தொடி நெகிழச் சாஅய்ச், செல்லலொடு 10

        கண்பனி கலுழ்ந்துயாம் ஒழியப், பொறை அடைந்து,
        இன்சிலை எழிலேறு கெண்டிப், புரைய
        நிணம்பொதி விழுத்தடி நெருப்பின் வைத்துஎடுத்து,
        அணங்கரு மரபின் பேஎண் போல
        விளரூன் தின்ற வேட்கை நீங்கத், 15

        துகளற விளைந்த தோப்பி பருகிக்,
        குலாஅ வல்வில் கொடுநோக்கு ஆடவர்
        புலாஅல் கையர், பூசா வாயர்,
        ஒராஅ உருட்டுங் குடுமிக் குரலொடு
        மாரஅஞ் சீறுர் மருங்கில் தூங்கும் 20

        செந்நுதல் யானை வேங்கடம் தழீஇ,
        வெம்முனை அருஞ்சுரம் இறந்தோர்
        நம்மினும்வலிதாத் தூக்கிய பொருளே!

தோழி, நீ வாழ்வாயாக! நிழலினிடத்தே விளங்கும் அறல்பட்டதன்மைபோலக் குழன்ற கூந்தலினையும், குழலினைப் போன்ற இனிதான குரலினையும் உடைய, பாவையினைப்