பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

அகநானூறு - மணிமிடை பவளம்



மேற்கோள்: "பரந்து வெளிப்படாதாகி வருந்துக என்னலம்” என்றதனால், சேரிப் பரத்தையைப் புலந்து கூறுதல் முதலியனவும் கொள்க’ எனச் இச்செய்யுளைப், புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும் என்னும் சூத்திர உரையினும்,

‘தில்' ஒழியிசைப் பொருளிலே வந்ததற்கு வருகதில் அம்ம’ என்ற பகுதியைக் காட்டி, வந்தக்கால் இன்னது செய்வேன் என்பது பொருள் என, விழைவே காலம்’ என்னுஞ் சூத்திர உரையினும் நச்சினார்க்கினியர் கூறுவர்.

பாடபேதங்கள்: 3. பையெனக் 4 கடியில் புகூஉம்; கடியிலன் புகூஉம்.

277. செவ்வி வேனல்!

பாடியவர்: கருவூர் நம் மார்பகனார். திணை: பாலை. துறை: தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குப் பருவங்கண்டு அழிந்து சொல்லியது.

(கார்காலத்து வருவேன்’ என்று உறுதிகூறிப் பிரிந்து சென்றவனான தலைவன், சொன்னபடி வராமற் போயினான். இளவேனில் வந்தும், அவன் வராமற்போகவே, அந்தப் பருவத்தைக் கண்டு, தன் நெஞ்சம் நிலையழிந்த தலைவி, தன் தோழியிடம் இப்படிக் கூறுகின்றாள்.)


        தண்கதிர் மண்டிலம் அவிர்அறச் சாஅய்ப்
        பகலழி தோற்றம் போலப், பையென
        நுதல்ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார்,
        தவலில் உள்ளமொடு எஃகுதுணை ஆகக்,
        கடையல குரலம்,வாள்வரி உழுவை 5

        பேழ்வாய்ப் பிணவின் விழுப்பசி நோனாது,
        இரும்பனஞ் செறும்பின் அன்ன பரூஉமயிர்ச்,
        சிறுகண், பன்றி வருதிறம் பார்க்கும்
        அத்தம்ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை,
        பொத்துடை மரத்த புகர்படு நீழல், 10

        ஆறுசெல் வம்பலர் அசையுநர் இருக்கும்,
        ஈரம்இல், வெஞ்சுரம் இறந்தோர் நம்வயின்
        வாரா அளவை-ஆயிழை!-கூர்வாய்
        அழல்அகைந் தன்னகாமர் துதைமயிர்
        மனைஉறை கோழி மறனுடைச் சேவல் 15

        போர்எரி எருத்தம் போலக் களுலிய
        பொங்கழல் முருக்கின் எண்குரல் மாந்தி,