பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அகநானூறு - மணிமிடை பவளம்



தான் தலைவனைப் பிரிந்து வருந்தியிருப்பவும், தன் நெஞ்சம் தலைவனது தளரடியைத் தாங்கச் சென்றது அதன் அன்பு மிகுதியினால் என, அதன் அன்பு மிகுதியை நோக்கி, நன்னர் நெஞ்சம் என்றனள்.

சொற்பொருள்: 1. மன்று - ஊர் அம்பலம். மனை - இல்லங்கள். மடிந்தன்று - உறங்கின. 2. கொன்றோரன்ன - கொன்றாலொத்த ஒர், அசை, 3. கணைஇ செறிந்து, உரைஇ - பரந்து. கரைபொழியும் கரைபு ஒழியும்; கரைபு கரைந்து, 7. கைமிக்கு கைகடந்து, 8. இறும்பு-சிறுகாடு. இட்டருஞ்சிலம்பு - குறுகிய கடத்தற்கரிய பக்கமலை. 12. மாரிவானம் - மாரிக் காலத்து மேகம்.13. இயவு வழி.

மேற்கோள்: 'மாயோன் மேய காடுறை யுலகமும்' என்னும்அகத்திணையியற் சூத்திரவுரையில், இறும்புபட். சிறுநெறி” என்பது குறிஞ்சி ஒழுக்கத்திற்குக் குறிஞ்சி நிலம் உரியதாயிற்று என்றும்;'

‘காடு மலையு முல்லை குறிஞ்சி, கூதிர் யாமம் என்மனார் புலவர்' என்ற சூத்திரவுரையில், குறிஞ்சிக்கட் கூதிரும் யாமமும் வந்ததற்கு இப் பாட்டினைக் காட்டி, இஃது இரவுக் குறிக்கட் சிறைப்புறமாகத் தோழிக்கு உரைப்பாளாக உரைத்தது என்றும்;

‘மறைந்தவற் காண்டல்’ என்னும் களவியற் சூத்திரத்துப் ‘பொழுது மாறும்புரைவ தன்மையின், அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும்' என்னும் பகுதிக்கு இப்பாட்டினைக் காட்டிக், ‘காமம் கரைபு ஒழியாநிற்கவும் என்ன நன்றி கருதி இருவரொடுஞ் சூழாது சென்றது நெஞ்சு எனப் பொழுதும் நெறியும் இரண்டும் கூறினாள் 'மனைமடிந்தன்றே' என்பது பொழுது, சிறுநெறி’ என்றது ஆற்றின்னாமை; இதனைப் பொருளியலுட் கூறாது, தன் வயின் உரிமையும், அவன் வயிற் பரத்தைமையும் பற்றிக் ஈண்டுக் கூறினாள் என்றும்;

“பொழுதும் ஆறும் காப்பும்' என்னும் பொருளியற் சூத்திர உரையில், ‘மன்றுபா டவிந்து' என்பது, பொழுது வழுவுதலிற் குற்றங் காட்டியது என்றும்;

‘நோயும் இன்பமும்’ என்னும் பொருளியற் சூத்திர உரையில், இப்பாடலில் ‘நெஞ்சம் தளரடி தாங்கிய சென்றது இன்றே' என்பது,உறுப்புடையதுபோல அழுகைபற்றிக் கூறியது என்றும், நச்சினார்க்கினியர் காட்டுவர்.

‘முட்டுவயிற் கழறல்’ என்னும் மெய்ப்பாட்டியற் குத்திரத்து, ‘அச்சத்தின் அகறல்’ என்னும் மெய்ப்பாட்டிற்கு இதனை