பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

அகநானூறு - மணிமிடை பவளம்


விளக்கம்: மகளிர் கடற்கரையில் இவ்வாறு விளையாடும் செய்தியினைச் சிலப்பதிகார வாழ்த்துக் காதையிலேவரும் 'தீங்கரும்பு நல்லுக்கையாக' என்னும் பகுதியும் விளக்கும்.

உள்ளுறை: பெண்களின் ஆரவாரத்திற்கு அஞ்சி ஒட வேண்டிய சிரல், அமைதியாக மருதின் தாழ்ந்த கிளையிலே யிருந்து உறங்குவதுபோல, அவனும் எழுந்த ஊரலரின் ஆரவாரங்களைக் கேட்டும் பொருட்படுத்தாது, தான் அநுபவித்த களவுறவின் இன்ப மயக்கத்தாலே, வரைந்து வராது வாளாவிருந்தனன் என்று சொன்னதாகக் கொள்க.

குறிப்பு: வரைந்து கொள்ளுதலுக்கான பொருள் தேடிவரப் பிரிந்து செல்பவன் தலைவன் எனக் கொள்க. தலையளி செய்துகூடிய காலத்தே, “அவன் வாய்மையாளன், என்றும் பிரியேன் என்றதைப் பொய்யான்” எனத் தாம் கருதித் தெளிந்த நிலையினைப் பொய்யாக்கி, அவன் ‘போவேன்’ என்றதனால், தோழி இங்ஙனம் கூறினள் என்பதும் ஆம்

மேற்கோள்: ‘குறியெனப் படுவது... மொழி' என்னும் இறையனார் களவியல் சூத்திர உரைக்கண், இந்தச் செய்யுளை உதாரணமாக நக்கீரர் காட்டுவர்.

‘கூதிர் வேனில் என்றிரு பாசறை' என்னும் தொல்காப்பியப் புறத்திணையியற் சூத்திர உரையினும், ‘பெறற் கரும் பொருள் முடிந்தபின் வந்த' என்னும் தொல்காப்பியக் கற்பியற் சூத்திர உரையினும், நச்சினார்க்கினியரும் இச்செய்யுளை உதாரணமாகக் கொண்டுள்ளனர்.

287. அலைக்கும் மாலை!

பாடியவர்: குடவாயிற் கீரத்தனார். திணை: பாலை, துறை: பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்து நின்று தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(தலைவியைப் பிரிந்து சென்ற தலைமகன், இடைச்சுரத்திலே, அவளுடைய நினைவு மிகுதியாகித் தன்னை வருத்தத் தன் நெஞ்சிற்கு இப்படி உரைத்துக் கொள்ளுகின்றான்)

தொடிஅணி முன்கைத் தொகுவிரல் இவைஇப்,
படிவ நெஞ்சமொடு பகல்துணை ஆக,
நோம்கொல்? அளியன் தானே! - தூங்குநிலை,
மரைஏறு சொறிந்த மாத்தாட் கந்தின்
சுரைஇவர் பொதியில் அம்குடிச் சீறூர் 5