பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

அகநானூறு - மணிமிடை பவளம்


அசையும் நிலை 4. கந்து - தெய்வம் வீற்றிருக்கும் கல் அல்லது குற்றி, 6.நரைக்கண் இட்டிகை - வெளியாகத் தோன்றுவதாகிய பலிபீடம் 7. பொரிஅரை - பொரிந்த அடிமரம், 8. வீழ்- விழுது. 9. இரிக்கும் - ஒட்டும். 11. ஒல்குதல் - அசைதல் 14. நிரம்பா - தொலையாத,

விளக்கம்: கலையின் வருத்தந்திரப் பிணை அதன் முதுகினை நக்கிவிடக் காண்பவன், தன் துயரைத் தீர்க்கத் தன் அருமைக் காதலியும் அவ்விடத்திலில்லையே என்ற ஏக்கம் பெரிதாயினான் என்க. குற்றி நட்டுத் தெய்வம் அதனிடத்தே வந்து நின்று அனைவருக்கும் அருள்வதாகப் பாவித்துப் பலியிட்டு வழிபட்ட வழக்கமே பிற்காலத்து இலிங்க வழிபாடாக வளர்ந்தது என்பர் ஆராய்வோர்.

அவளும், ஞாயிற்றைக் கைகுவித்தவளாக வாடியிருப்பாள், அவள் நினைவால் யானும் இங்கிருந்து வாடுவேன்; ஏனோ இதற்குத் துணிந்தேன்? என அவன் வருந்தினான் என்க.

288. எளிமை செய்தனை!

பாடியவர்: விற்றுாற்று மூதெயினனார்: முத்தூற்று மூதெயினனார் என்பதும் பாடம். திணை: குறிஞ்சி. துறை: பகற்குறிக் கண் தோழி செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது.

(தலைமகனும் தலைமகளும் பகற்குறிக்கண் கூடி இன்புற்று வந்துகொண்டிருந்த காலம்; தலைவியின் ஒழுக்கத்தால் ஊரலர் எழ, அவளை இற்செறிப்பில் வைத்துக் காக்கத் தொடங்கினர் வீட்டவர். அந்தச் செய்தியைக் குறியிடத்தே வந்திருக்கும் தலைவனிடம் அறிவித்து, அவனை, விரைவிலே வரைவுடன் வந்து தலைவியை மணந்துகொள்ளுமாறு, தோழி வேண்டுகின்றாள்.)

சென்மதி; சிறக்க, நின் உள்ளம்! நின்மலை
ஆரம் நிவிய அம்பகட்டு மார்பினை,
சாரல் வேங்கைப் படுசினைப் புதுப் பூ
முருகுமுரண் கொள்ளும் உருவக் கண்ணியை,
எரிதின் கொல்லை இறைஞ்சிய ஏனல், 5

எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்!
கனிமுதிர் அடுக்கத்துஎம் தனிமை காண்டலின்
எண்மை செய்தனை ஆகுவை; நண்ணிக்
கொடியோர் குறுகும் நெடிஇருங் குன்றத்து,
இட்டுஆறு இரங்கும் விட்டுஒளிர் அருவி 10

அருவரை இழிதரும் வெருவரு படாஅர்க்
கயந்தலை மந்தி உயங்குபசி களைஇயர்,