பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 23


இலை - கொழுவிய இலை. 8. பொதி - மொட்டு, 9. போகில் - புள் 10 பெண்டிர் என்றது வறுமையுற்ற பெண்டிரை அல்குற் கூட்டும் - மடியினிடத்தே கூட்டா நிற்கும்; ‘அல்கற் கூட்டும்’ பாடமாயின் இரவிற் கூட்டும். 15 தேன் நாறு கதுப்பு - வண்டு மொய்க்கும் கூந்தல். 17. நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் - மனக்கருத்தை வாய்விட்டுச் சொல்லினர்.

விளக்கம்: புன் மறைந்து (3) என்னும் பாடத்திற்குப்புல்லும் புதரிலே மறைந்திருந்து என்றுபொருள் கொள்க.

பாடபேதங்கள்: 3, புன்மறைந்து 9. பொங்கர் வெண்காழ் 10. அல்கற் கூட்டும்.

130. பார்த்தால் பேச மாட்டீர்கள்!

பாடியவர்: வெண்கண்ணனார். திணை: நெய்தல். துறை: கழறிய பாங்கற்குத் தலைமகன் கழற்றெதிர் மறுத்தது. சிறப்பு: கொற்கை முன்றுறைச் சிறப்பு.

(தலைவன் தன் ஆண்மையெல்லாம் தோற்றும் பெண் ஒருத்திபால் மையல்கொண்டு மயங்கினான். அவனை இடித்துரைத்துத் தோழர்கள் பழித்தனர். அதற்கு அவன் எதிர் மறுத்து உரைப்பது இது)

        அம்ம வாழி, கேளிர்! முன்நின்று
        கண்டனிர் ஆயின், கழறலிர் மன்னோ
        நுண்தாது பொதிந்த செங்காற் கொழுமுகை
        முண்டகம் கெழீஇய மோட்டுமணல் அடைகரைப்
        பேஎய்த் தலைய பினர்.அரைத் தாழை 5

        எயிறுடை நெடுந்தோடு காப்பப், பலவுடன்
        வயிறுடைப் போது வாலிதின் விரீஇப்,
        புலவுப்பொருது அழித்த பூநாறு பரப்பின்
        இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
        கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும் 10

        நற்றேர் வழுதி கொற்கை முன்துறை
        வண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தற்
        போதுபுறங் கொடுத்த உண்கண்
        மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே.
        பாங்கரே! யான் சொல்வதனைக் கேட்பீராக!

நுண்ணிய தாது மூடிய சிறந்த காம்பினையும், கொழுவிய மொட்டினையுமுடைய, கழிமுள்ளி பொருந்திய மேடிட்ட மணலடைந்த கரையின்கண்ணே;