பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

அகநானூறு - மணிமிடை பவளம்



(தலைமகன் தலைமகளைப் பிரிந்து வினைமேற் சென்றவன், வருவதாகக் குறித்துச்சென்ற கார்காலத்தினும் வராதவனாக,மனம் உலைவுற்று வாடி நலிந்தனள் தலைவி. அதுகண்டு ஆற்றாதாளாகிய தோழி, அவளுடைய நிலைக்கு வருந்தியவளாக, அவளுக்கு இவ்வாறு ஆறுதல் கூறுகின்றாள்.)

         நிலம்நீர் அற்று நீள்சுனை வறப்பக்
         குன்றுகோடு அகையக், கடுங்கதிர் தெறுதலின்,
         என்றுழ் நீடிய வேய்படு நனந்தலை,
         நிலவுநிற மருப்பின் பெருங்கை சேர்த்தி,
         வேங்கை வென்ற வெருவரு பனைத்தோள் 5

         ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பிப்
         பல்மர ஒருசிறைப் பிடியொடு வதியும்
         கல்லுடை அதர கானம் நீந்திக்
         கடல்நீர் உப்பின் கணஞ்சால் உமணர்
         உயங்குபகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து 1O

         அகல்இடம் குறித்த அகல்வாய்க் கூவல்
         ஆறுசெல் வம்பலர் அசைவிட ஊறும்,
         புடையலம் கழற்கால் புல்லி குன்றத்து,
         நடைஅருங் கானம் விலங்கி, நோன்சிலைத்
         தொடைஅமை பகிழத் துதன்றுநிலை வடுகர், 15

         பிழிஆர் மகிழ்நர், கலிசிறந்து ஆர்க்கும்
         மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்,
         பழிதீர் மாண்நலம் தருகுவர் மாதோ,
         மாரிப் பித்திகத்து ஈர்இதழ் புரையும
         அங்கலுழ் கொண்ட செங்கடை மழைக்கண், 20

         மணங்கமழ் ஐம்பால், மடந்தை! நின்
         அணங்குநிலை பெற்ற தடமென் தோளே!

நிலமெங்கும் நீர்வளம் அற்றதாக, ஆழ்ந்த சுனைகளும் வறண்டு போயின. மலைக்கண், மரக்கிளைகளும் பற்றி எரிவனவாயின. கடுமையான ஞாயிற்றுக் கதிர்கள் வருத்துதலால், எங்கும் வெப்பம் மிகுதியாக, அதனால் மூங்கில்களும் வெடித்துக் கிடக்கும் நிலையினவாயின. அகன்ற அவ்விடங்களிலே,

வேங்கைப் புலியினை வென்ற, அச்சம் வரும் பணைத்த கையினையுடைய, உயரமான குன்றுபோல விளங்கும் யானையும் வருந்தி மதமழிந்து, நிலவு நிறத்தையுடைய தன் கொம்பினோடு தன் பெருங்கையினையும் ஒருசேர வைத்துக் கொண்டதாகப், பல மரங்களையுடையதான ஒரு பக்கத்திலே,