பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

அகநானூறு - மணிமிடை பவளம்




(பொருளார்வம் தன்னிடத்தே மிகுதியாக, வேற்று நாடு சென்று பொருளிட்டி வருதற்கும் துணிந்தான் ஒரு தலைவன். அவன் விடைபெற்றுப் புறப்பட்ட காலத்திலே, அவள், நீர் வார்ந்த கண்ணினளாக, நின்னுடன் யானும் வருவேன்’ எனக் கதறியழுத காட்சி அவன் நெஞ்சிலே நிலைபெற்றும், அவன் பிரிந்து சென்றான். வழியிடையிலே, அவன், தன் நெஞ்சுக்கு இவ்வாறு சொல்லுகின்றான்)

பானாட் கங்குலும் பெரும்புன் மாலையும்,
ஆனா நோயொடு அழிபடர்க் கலங்கி,
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக,
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின்;
இருங்கவின் இல்லாப் பெரும்புன் தாடிக், 5

கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென,
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்
பெயர்பயம் படரத் தோன்றுகுயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது, அசைவுடன் ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும் 10

சூர்முதல் இருந்த ஒமையம் புறவின்,
நீர்முள் வேலிப் புலவுநாறு முன்றில்,
எழுதி யன்ன கொடிபடு வெருகின்
பூளை அன்ன பொங்குமயிர்ப் பிள்ளை,
மதிசூழ் மீனின், தாய்வழிப் படுஉம் 15

சிறுகுடி மறவர் சேக்கோள் தண்ணுமைக்கு
எருவைச் சேவல் இருஞ்சிறை பெயர்க்கும்
வெருவரு கானம் நம்மொடு,
'வருவல் என்றோள் மகிழ்மட நோக்கே?

பெரிதான அழகு என்பது எதுவும் அற்ற பெரிதான பொலிவில்லாத தாடியினையும், வன்கண்மையினையும் உடையவர் மறவர்கள். அவர்களது அம்புகள் தேய்த்துச் சென்றதாக, அதனால் பக்கம் தேய்ந்துள்ள அச்சமிக்க நடுகல்லிலே பெயரும் பீடும் விரிவாகத் தோன்றுமாறு பொறித்த எழுத்துக்களை, மனம் பொருந்த நோக்குதலும் மாட்டாதவர்களாய், மிகுந்த தளர்ச்சியுடன் வழியே செல்பவரான புதியவர்கள் அதனைக் கடந்து செல்லும், அடி மரத்திலே தெய்வம் இருப்பதான ஓமைமரக் காட்டிலே,

ஈர்கின்ற முள்வேலியையுடைய புலால் நாற்றமுடைய முற்றத்திலே, ஒவியமாக எழுதியதுபோன்று சோர்ந்து அசையாது கிடக்கும் பூனையின் பூளைப்பூப்போன்று விளங்கும்