பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 373


மயிரினையுடைய குட்டிகள், திங்களைச் சூழ்ந்துள்ள விண்மீன்களைப் போலத் தம் தாயைச் சூழ்ந்து கிடக்கும்.

அத்தகைய சிறு குடியிருப்புக்களிலேயுள்ள மறவர்கள், ஏறுகொள்ளக் கருதி எழுதற்பொருட்டு எழுந்த பறையொலிக்கு, எருவைச் சேவலானது அஞ்சிச் சிறகு பெயர்த்தும் பறந்து போகும்.

அத்தகைய அச்சம் வரும் கானத்திற்கும் நம்மோடும் வருவேன் என்றவள் நம் தலைவி. அவளுடைய மகிழ்வுதரும் மடப்பமான நோக்கம்.

பாதி நாளாகிய இரவுவேளைகளிலும், மிகப் பொலிவற்றதான மாலை நேரங்களிலும், அமைதியான காம நோயோடு நெஞ்சழிந்த பெருந்துயராற் கலங்கியவளாக, நம்மை நினைதலாகிய துன்பம் அவள்பால் அளவு கடத்தலான், நம்மிடத்தேயும், இனி என்ன தீங்கு நிகழ்த்துமோ? (நெஞ்சமே யான் ஏது செய்வேன்?);

என்று, பொருள்வயிற் போகா நின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 1. பானாட் கங்குல் - நாளின் பாதியாகிய இரவு; கங்குலின் பாரதியாகிய நடுச்சாமமும் ஆகும். பெரும் புன் மாலை - பெரிதும் பொலிவிழந்ததான மாலைக்காலம்; மாலை பொலிவிழந்து தோன்றுவது தலைவனைப் பிரிந்து உறைதலான். 2. ஆனாநோய் அமையாத பெருநோய் பிரிவுத் துயர் 5. இருங்கவின் - பெரிய அழகு கருமையான ஓர் அழகு எனலும் பொருந்தும்; பாலை நிலத்தவராய் அவர் தாடியைப் பேணுதற்கான வசதியற்றவராயினதால், கருமைப் பொலிவுற்றுத் தோன்றுதல் உண்மையாதலை நினைக்க. 6. பகழி மாய்த்தென - பகழிகள் உராய்ந்து சென்று தேய்த்ததாக நடுகல் மறைவிலே இருந்து அவர் எய்த அம்புகளால் அவை பக்கம் தேய்ந்து விளங்கின என்க. 11. சூர் முதலிருந்த ஒமை தெய்வத்தை அடிமரத்தே உடையதான ஒமை மரம், 13 எழுதியன்ன - எழுதி வைத்தாற்போன்ற 14. பொங்கு மயிர் - அடர்ந்த மயிர்.

விளக்கம்: ‘எருவைச் சேவல் தண்ணுமை ஒலி எழத்தானும் சிறை பெயர்த்து எழும் என்றது, மறவர் ஆநிரை - கவரச் செல்லுதலால், அங்குப் போர் நிகழத், தான் உண்ணுதற்கான பிணங்கள் கிடைக்கும் என்ற ஆர்வத்தால் என்க. அத்தகைய காட்டின் கடுமையினையும் கருதாது, தானும் உடன் வருவேன் என நின்ற தலைவியின் மடமை அவன் உள்ளத்தை வாட்டுவதாயிற்று என்க. .