பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

அகநானூறு - மணிமிடை பவளம்



பாடபேதங்கள்: 6. கடுங்கணை மறவர்.7.மருங்கில் நுணுகிய 8. தொன்று குயிலெழுத்து. 1. சுரமுதலிருந்த,

298. உவப்பே இனிது!

பாடியவர்: மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்.திணை: குறிஞ்சி. துறை: இரவுக் குறிக்கண் தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.

(இரவுக் குறியிடத்தே கூடிய காதலர் இருவரும் தம்முள் பேசுகின்ற சுவையான பேச்சு இது. தலைவி, தன் தோழியும் தானும் அவன் வரவை எதிர்பார்த்திருந்த செய்தியை, அவன் வந்ததும், அவனிடம் இப்படிக் கூறுகின்றாள்.)

பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு
வயங்குதொழில் தரீஇயர், வலன்ஏர்பு விளங்கி,
மல்குகடல் தோன்றி யாங்கு, மல்குடை,
மணிமருள் மாலை, மலர்ந்த வேங்கை
ஒண்தளிர் அவிர்வரும் ஒலிகெழு பெருஞ்சினைத் 5

தண்துளி அசைவளி தைவரும் நாட!
கொன்றுசினம் தணியாது வென்றுமுரண் சாம்பாது,
இரும்பிடித் தொழுதியின் இனந்தலை மயங்காது,
பெரும்பெயற் கடாஅம் செருக்கி, வளமலை
இருங்களிறு இயல்வரும் பெருங்காட்டு இயவின், 10

ஆர்இருள் துமிய வெள்வேல் ஏந்தி,
தாம்பூங் கோதை ஊதுவண்டு இரீஇ,
மென்பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு, இவண்
நீவந் ததனினும், இனிதுஆ கின்றே;
தூவல் கள்ளின் துணைதேர், எந்தை 15

கடியுடை வியல்நகர் ஓம்பினள் உறையும்
யாய்அறி வுறுதல் அஞ்சிப் பானாள்,
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்,
யான்நின் கொடுமை கூற, நினைபு:ஆங்கு,
இனையல்; வாழி, தோழி! நந் துறந்தவர் 20

நீடலர் ஆகி வருவர், வல்லென;
கங்குல் உயவுத்துணை ஆகிய
துஞ்சாது உறைவி இவளுவந் ததுவே!

உலகத்திற்குப், பலவகையான பயன்களும் பொருந்தியதாக விளங்கும் செல்வத்தின் தன்மை வாய்ந்த பல கதிர்களை உடையதாக விளங்குவது ஞாயிறு. விளக்கமுறும் தொழில்கள் பலவற்றையும் உலகத்தவர்க்குத் தருமாறு, வானிலே வலமாக எழுந்த விளக்கமுற்றுப், பெரிய கடலிடையிலே அது தோன்றும்.