பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

அகநானூறு - மணிமிடை பவளம்


வரும் காற்று. தைவரும் - தட்விச் செல்லும் 10, இயவு - வழி 12. தாழ் பூங்கோதை - தாழ்ந்து தொங்கும் பூவிளங்கும் கூந்தலுமாம். 13. மென்பிணி - மென்மையான கட்டு; அரும்பின் பிணிப்பு: 15. தூவல் மழை.துனை விரைவு16.கடி-காவல்.18.கரவல் நெஞ்சம் - கரத்தலை உடையதான நெஞ்சம்; கரத்தல் - மறைத்தல். 22. உயவுத் துணை வருத்தத்திற்கு உரிய துணை; உசாத் துணையும் ஆம். - -

விளக்கம்: என்னளவிலே, நீ வருதலால் நான் கொண்ட மகிழ்வினும், நின் வருகையால் என் துயர் தீர்ந்ததென உவக்கும் என் தோழியின் உவப்பினால் நான் கொள்ளும் இன்பமே மிகுதியாகும் என்றனள், தோழியின் உதவியின் சிறப்பைக் கூறினாள்.

பாடபேதம்: 11 - 14, ‘ஏந்தி மென்பிணி யவிழ்ந்த தாழ் பூங்கோதை, ஊது வண்டிரிய வழிப்பணை முயங்கிய, நீ வந்த தனினும்.

299. மறத்தலும் அரிதே!

பாடியவர்: எயினந்தை மகனார் இளங்கீரனார். திணை: பாலை துறை: இடைச் சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(தன் அன்புறு காதலியைப் பிரிந்து வினைமேற் கொண்டவனாகச் சுரத்துவழியே சென்று கொண்டிருக்கிறான், ஒரு தலைவன். இடை வழியிலே, தன் தலைவியின் நினைவு உள்ளத்தே மிக்கெழுந்து வருந்தத் தொடங்க, அவன், தன் நெஞ்சிற்கு இவ்வாறு கூறுகின்றான்)

எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த
முன்னம், முன்உறுபு அடைய உள்ளிய
பதிமறந்து, உறைதல் வல்லுநம் ஆயினும்
அதுமறந்து உறைதல் அரிது ஆகின்றே
கடுவளி எடுத்த கால்வழி தேக்கிலை 5

நெடுவிளிப் பருந்தின் வெறிஎழுந்து தாங்கு,
விசும்புகண் புதையப் பாஅய்ப், பலஉடன்
அகல்இடம் செல்லுநர் அறிவுகெடத் தாஅய்க்,
கவலை சுரக்கும் காடுஅகல் அத்தம்,
செய்பொருள் மருங்கின் செலவுதனக்கு உரைத்தென, 10

வைகுநிலை மதியம் போலப், பையெனப்,
புலம்புகொள் அவலமொடு, புதுக்கவின் இழந்த