பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 411


அதியனும் வேறாவர். அகம் 162 இல் குறிப்பிடப்படும் அதியன் என்பான் பாண்டியர் படைத்தலைவனாயிருந்தவனே எனக் கொள்வாரும் உளர்.

'அவியன் (271)'

இவன், 'கள்ளில்' என்னும் ஊர்க்குத் தலைவனாக விளங்கியவன் எனவும், இவனுடைய மலைச்சாரல் மழைவளம் சிறந்தது எனவும் இப்பாடலுள் காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் என்பார் கூறுகின்றார். ‘களிமலி கள்ளில்’ என்றதனால் அவ்வூர் கள்வளமுடையதாயிருந்த தன்மையும் புலப்படும். இவ்ன் நாடு திருமுனைப்பாடி நாட்டுப் பகுதியிலிருந்தது எனவும் கூறுவர். இவன் மனைவி கற்பிற் சிறந்தவளாயிருந்தவள். மாறோக்கத்து நப்பசலையார் என்னும் புலவர் புறம் 383இல் ‘கற்புடை மடந்தை தற்புறம் புல்ல மெல்லணைக் கிடந்தோன் என, இவனைக் கூறுவதனால் அதனை நாம் அறியலாம்.

'அன்னி (126, 145) இவன் அழுந்துார்த் திதியனின் காவன்மரமாகிய புன்னையை வெட்டி வீழ்த்தும் விருப்பங்கொண்டு சென்றவன் என்பதும், எவ்வி என்பவன் நல்ல வார்த்தைகள் பலவும் சொல்லிஇவன் முயற்சியைத் தடுப்பதற்கு முயன்றும், தன் விருப்பம் அடங்காதவனாக இவன் படையெடுத்துச் சென்றான் எனவும், முடிவிலே திதியனால் அழிக்கப்பட்டான் எனவும் நக்கீரர் 126 ஆவது பாடலுள் கூறுகின்றார். கயமனார் என்பவர், இந்த அன்னி என்பவன் குறுக்கைப் பறந்தலை என்னுமிடத்துப் போரிலே திதியனின் பழமையாக நிலைபெற்று வந்த புன்னையை அடியோடும் வெட்டி வீழ்த்தினான் என்கின்றனர். ஆகவே, புன்னையை வெட்டி வீழ்த்திய பின்னரே திதியன் அன்னியை அழித்தான் எனலாம். இந்தத் திதியனே அன்னி மிஞிலி என்பாளின் பொருட்டாக, ஒன்றுமொழிக்கோசரைக் கொன்று அவளுடைய நோன்பை நிறைவேற்றியவன் என்பர் 196 ஆவது பாடலுள் பரணர். இந்தச் செய்தியை மீண்டும் 262 ஆவது செய்யுளிலும் பரணர் உரைப்பர்,

'அன்னி மிஞிலி (196, 262)

இவளுடைய தந்தையின் கண்களைப் பயற்றங் காட்டிலே ஆ புகுந்ததென ஊர்முது கோசர்கள் அழித்துவிட, இவள் கலத்து உண்ணாதவளாகவும், தூய ஆடை உடாதவளாகவும் சினந்து, கொண்ட தன் விரதம் மாறாதவளாகவும் விளங்கினாள் என்று