பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 415


தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் அழிக்கப் பெற்றவர்களுள் இவனும் ஒருவன். இவன் நாட்டு வளத்தினை 126 - ஆவது செய்யுளில் நக்கீரனாரும், இவன் நீடுர்க்கு உரியோன் எனவும், தன் ஏவல் கேளாது பகைத்த அரிமணவாயில் உறத்தூர் ஆகிய ஊர்களின் தலைவர்களை அழித்தவன் எனவும், இவன் ஊர் யாழிசைக்குப் பேர்பெற்றது எனவும் 266ஆவது செய்யுளுள் பரணரும் கூறுகின்றனர். இவன் நாட்டு வளத்தினை புறம் 24 மிகவும் தெளிவாக விளக்கிக் கூறும். இவன் தலையாலங்கானப் போரிலே வீழ்ந்துபட்டபோது வருந்திப் பாடியதாக வரும் புறநானூற்றுப் பாடல்கள் (233, 244) உள்ளத்தை உருக்குவனவாகும். இவன் காதலி, இவன் இறந்த பின்னர் கைம்மை நோன்பு பூண்டிருந்தனள் என்பதனைப் புறம் 234 உருக்கமுடன் எடுத்துக் கூறும்

எழினி (அஞ்சி) (211)

இவன் சோழன் ஏவலின்படி யானை பிடிக்கும் முயற்சிக்கு உதவாதவனாகச் சோழன் இவனை அழிக்குமாறு மத்தி என்பவனை ஏவினான். அவன் இவனைக்கொன்று இவன் பற்களைப் பறித்துவந்து வெண்மணிவாயிற் கதவிலே பதித்து வைத்தான். இந்தச் செய்தியை இந்தப் பாட்டுள் மாமூலனார் கூறுகின்றனர். ‘எழினி’ என்ற பெயருடையவர் பலருள் இவன் திருமுதுகுன்றப் பகுதியின்கண் இருந்தவன். கண்ணன் எழினி எனக் கூறுப்படுபவனும் (அகம் 197) இவனே என்பர். இவனும், தலையாலங்கனாப் பெரும்போரிலே நெடுஞ்செழியனோடு போரிட்டு உயிர்துறந்தவளுள் ஒருவன் என்பதனை அகநானூற்று 36 ஆவது செய்யுள் கூறும்.

ஓரி (208, 209)

இவன் கொல்லிமலைக்கு உரியவன். ‘வல்வில் ஓரி’ என இவனுடைய வில்லாற்றல் பெரிதும் போற்றப் பெற்றதாயிருந்தது. அதன் சிறப்பைப் புறம் 152 நன்கு கூறும். ஒரிக் குதிரையினை ஊர்ந்தே இவர் போர்மேற் செல்பவனாதலின் ஓரி எனப் பெற்றனன் என்பர். இவன் மலை பலாப்பழங்களை மிகுதியாக உடையது என 208 - ஆவது செய்யுளில் பரணரும் முள்ளுர் மன்னனாகிய மலையமான் திருமுடிக்காரி என்பவன் இவனைக்கொன்று இவன் நாட்டைச் சேரர்களுக்குக் கொடுத்தான் என 200 - ஆவது செய்யுளிற் கல்லாடரும் இவனைப் பற்றிக் கூறுகின்றனர். இவன் மழவர் கோமான் அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் சோழனுக்கும் நண்பனாக இருந்தவன் என்பதும் அறியப்படுவதாகும். இவனைப்