பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 29


அவிழ்த்த தலைமகன், அவள் நுகர்ந்து பாங்கற் கூட்டமும் பின்னர்த் தோழியிற் கூட்டமும் பெற்றுப், பின்னரும் இரவுக்குறி பகற்குறிகளால் அடைதற்கரிய கூட்டம் பெறச் சிந்தியா நின்றான்; அவ்வெண்ணத்தை விட்டு வரைவொடுபுகுக எனத் தலை மகளைத் தோழி வரைவுகடாயினாள் என்று கொள்க.

மேற்கோள்: 'ஆயர் வேட்டுவர்' என்னும் பொருளியற் சூத்திரவுரையில், 'ஆயர் வேட்டுவர் என்னும் இருபெயரான் அன்றி ஒன்றென முடித்தலாற் கொள்ளப்படும் தலைவரும் தலைவியரும் உளர் என்று உரைத்து, ‘வாணிணப் புகவிற் கானவர் தங்கை’ என வருவனவும் காண்க என்பர் நச்சினார்க்கினியர்.

பாடபேதங்கள்: 6 ஆயிழை மழைக்கண் 9. துளிதலைக் கலைஇய 1. விரியினர் உதிரக் காந்தள்.

133. ஒன்று வினவினர்!

பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். திணை: பாலை. துறை: ‘பிரிவிடை, ஆற்றாளாயினாள் எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. சிறப்பு: மிளைநாடு பற்றிய செய்தி.

(தலைவன் பிரிந்த காலத்திலே தலைவியின் வாட்டத்தைக் கண்டு, ‘இவள் எப்படிப் பொறுப்பாளோ? என்று கலங்கினாள் தோழி. அவளுக்குத் தன் தலைவனின் காதல் மிகுதியைக் கூறித், ‘தான் ஆற்றியிருப்பேன்’ என்பது தோன்றச் சொல்லுகிறாள் தலைவி) -

        'குன்றி அன்ன கண்ண, குருஉமயிர்ப்,
        புன்தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
        செம்பரல் முரம்பில் சிதர்ந்தபூழி,
        நல்நாள் வேங்கைவி நன்களம் வரிப்பக்,
        கார்தலை மணந்த பைம்புதற் புறவின், 5

        வில்எறி பஞ்சியின் வெண்மழை தவழும்
        கொல்லை. இதைய குறும்பொறை மருங்கில்,
        கரிபரந் தன்ன காயாஞ் செம்மலொடு
        எரிபரந் தன்ன இலமலர் விரைஇப்,
        பூங்கலுழ் சுமந்த தீம்புனற் கான்யாற்று 10

        வான்கொள் தூவல் வளிதர உண்கும்;
        எம்மொடு வருதல் வல்லையோ மற்று? எனக்
        கொன்ஒன்று வினவினர் மன்னே - தோழி!