பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 31


ராயினும், விரைய வந்து நம் நோய் தீருமாறு அருளிச் செய்வர் என்று, தலைவி குறிப்பால் தோழிக்கு உணர்த்தினாள் என்க.

மிளைநாடு என்பது ஒருநாடு; இந்நாட்டினராக மிளைக்கந்தன்; மிளைக்கிழான் நல்வேட்டன்; மிளைவேள் தித்தன் முதலியோரைக் காணலாம். இஃது ஒரு குறுநாடு எனவும், தமிழகத்துள் ஒரு பகுதி எனவும் கொள்ளலாம்.

மேற்கோள்: இப்பாட்டினை, இது பாலைக்கண் இரங்கள் நிகழ்ந்தது’ எனக், ‘கொண்டு தலைக்கழியினும் என்னுஞ் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர் காட்டுவர். அவர் கருத்துப்படி, தலைவர் எம்முடன் வருதலை மாட்டுவையோ என்று வினவினதன்றிக், கொண்டு சென்றிலர் என இரங்கியதாகும்.

பாடபேதம்: 16. இரநாட்டத்தத்து இரநாட்டிலுள்ள பாலையிடத்து.

134. இடி மறந்து செலுத்துக!

பாடியவர்: சீத்தலைச் சாத்தனார். திணை: முல்லை. துறை: வினைமுற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது.

(வினைமேல், தன் காதலியைப் பிரிந்து சென்ற தலைவன், வினையினை முடித்துவிட்டுத் திரும்புகின்றான். அப்போது அவன் தன்னுடைய பாகனுக்குக் குதிரைகளைச் செலுத்துவது பற்றிக் கூறியது இது)

        வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
        கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென;
        மணிமருள் பூவை அனிமலர் இடையிடைச்,
        செம்புற மூதாய் பரத்தலின், நன்பல
        முல்லை விகழல் தாஅய், வல்லோன் 5

        செய்கை அன்ன செந்நிலப் புறவின்
        வாஅப் பாணி வயங்குதொழிற் கலிமாத்
        தாஅத் தாளினை மெல்ல ஒதுங்க,
        இடிமறந்து, ஏமதி-வலவ! குவிமுகை
        வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த 10

        ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
        கணைக்கால் அம்பினைக் காமர் புனர்நிலை
        கடுமான் தேர்ஒலி கேட்பின்,
        நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே.