பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 33



மேற்கோள்: கம நிறைந்தியலும் என்ற தொல்காப்பியச் சொல்லதிகாரச் சூத்திரத்தின் உரையுள், கமஞ்சூன் மாமழை’ என்பதனைச் சேனாவரையர் மேற்கோள் காட்டுவர்.

பாடபேதங்கள்: 3. மணிமலர்ப் பூவை. 9 தேகுமதி. 14. ஆகலுமுண்டோ. துறை: வினைமுற்றி மறுத்தரா நின்ற தலைமகன் பாகற்கு உரைத்தது என்றும் காணப்படும்.

135. அறிவு பிறிதாகி மயங்கினேன்!

பாடியவர்: பரணர். திணை: பாலை. துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொன்னது. சிறப்பு: ஆதிமந்தியின் காதற் சிறப்பு: காமூர்த் தலைவனாகிய கழுவுள் என்பானை ஈரெழு வேளிரும் சென்று அழித்த செய்தி.

(காதலன் பிரிய, அந்தப் பிரிவினால் தன் அழகுகெட்டு நோய்கூர்ந்த தலைவி, தன்னுடைய ஆற்றாமையைத் தன் அன்புத் தோழியிடம் எடுத்துக்கூறி இப்படிப் புலம்புகிறாள்.)

        திதலை மாமை தளிர்வனப்பு அழுங்கப்,
        புதலிவர் பீரின் எதிர்மலர் கடுப்பப்,
        பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,
        எழுதெழில் மழைக்கண் கலுழ, நோய் கூர்ந்து,
        ஆதி மந்தியின் அறிவுபிறி தாகிப் 5

        பேதுற் றிசினே-காதல்அம் தோழி!
        காய்கதிர் திருகலின் கனைந்துகால் கடுகி,
        ஆடுதளிர் இருப்பைக் கூடுகுவி வான்பூக்
        கோடுகடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
        காடிறந் தனரே, காதலர்: அடுபோர், 10

        வீயா விழுப்புகழ், விண்தோய் வியன்குடை,
        ஈர்-எழு வேளிர் இயந்துஒருங்கு எறிந்த
        கழுவுள் காமூர் போலக்
        கலங்கின்று மாது, அவர்த் தெளிந்தஎன் நெஞ்சே.

அன்பினையுடைய அழகிய தோழியே!

எரிக்கின்ற சூரியன் முடுகுதலினாலே காற்று மிக்கு விரைந்து வீச, அதனாலே ஆடும் இயல்பினையுடைய தளிரைக் கொண்ட இருப்பையினது இதழ்குவிந்த பெரிய பூக்கள், சங்கினாற் கடையப்பட்ட கழங்குபோலக் கற்பாறையின் மேலே பரவிக்கிடக்கும் காட்டினைக் கடந்துசென்றனர் நம் காதலர். ஆதலினாலே,