பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அகநானூறு - மணிமிடை பவளம்



137. யான்தான் நோவேன்!

பாடியவர்: உறையூர் முதுகூத்தனார். திணை: பாலை. துறை: “தலைமகன் பிரியும் எனக் கருதி வேறுபட்ட தலை மகட்குத், தோழி சொல்லியது. சிறப்பு: திண்தேர்ச் செழியனின் மலை மூங்கிலும், உறந்தைச் சோழனின் பங்குனிவிழாவும்.

(தலைவன் பிரியப்போகிறானோ என நினைந்து மெலிந்தாள் தலைவி. அவள் மெலிவாற் கவலையுற்ற தோழி, தன் மனம் நொந்து இவ்வாறு கூறுகின்றாள்.)

        ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட
        சிறும்பல் கேணிப் பிடியடி நசைஇக்,
        களிறுதொடுஆக் கடக்குங் கான்யாற்று அத்தம்
        சென்றுசேர்பு ஒல்லார் ஆயினும், நினக்கே-
        வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர் 5

        இன்கடுங் கள்ளின் உறந்தை ஆய்கண்,
        வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
        உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்
        பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
        வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில் 10

        தீஇல் அடுப்பின் அரங்கம் போலப்,
        பெரும்பாழ் கொண்டன்று, நுதலே; தோளும்,
        தேளா முத்தின் தெண்கடற் பொருநன்
        திண்தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
        நல்லெழில் நெடுவேய் புரையும் 15

        தொல்கவின் தொலைந்தன; நோகோ யானே,

பாலைவழியிற் செல்லும் புகியர், சேற்றைக் கிளைத்து உண்ட சிறிய பலவாகிய கேணிகளைப், பிடியின் அடியென்று கருதி வியப்புற்றுக் களிறுகள் தொட்டுத் தொட்டுப் பார்த்து, அஃதின்மையினாலே அல்லலுழந்து, அதனைக் கடந்துசெல்லும் காட்டாற்றினையுடைய சுரத்திலே, நம் தலைவர் சென்று சேர் தலை உடன்படாராயினும், அவர் பிரிவரென்று கருதியதனால்,

பகைவரை வெல்லும் பொருட்டாக எறிகின்ற வீர முரசினாலே வெற்றிப் போரினையுடைய சோழரது, கடுப்பு இனிய கள்ளையுடைய உறையூரிடத்து, கடுகி வருகின்ற நீர் உடைக்க இடிந்த கரையினையுடைய காவிரிப் பேராற்றின் அழகிய வெண்மணலடுத்த, தேன்மணம் கமழ்கின்ற குளிர்ந்த பொழிலிலே, பங்குனி முயக்கம் கழிந்த மறுநாளில், பூவோடு