பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அகநானூறு - மணிமிடை பவளம்


        நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
        உலகுதொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி. 5

        மழைகால் நீங்கிய மாக விசும்பில்
        குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து,
        அறுமீன் சேறும்அகல்இருள் நடு நாள்:
        மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கிப்,
        பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய 10

        விழவுஉடன் அயர, வருகதில் அம்ம!
        துவரப் புலர்ந்து தூமலர் களுலித்,
        தகரம் நாறுந் தண்நறுங் கதுப்பின்
        புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
                பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇ, 15

        கூழைக் கூந்தற் குறுந்தொடி மகளிர்
        பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்
        பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
        கடிதுஇடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு
        தீங்குலை வாழை ஓங்குமடல் இராது; 20

        நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றுஞ்
        செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
        வெல்போர்ச் சோழன் இடையாற்று அன்ன
        நல்லிசை வெறுக்கை தருமார், பல்பொறிப்
        புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை 25
        
        நரந்த நறும்பூ நாள்மலர் உதிரக்,
        கலைபாய்ந்து உகளும், கல்சேர் வேங்கைத்,
        தேம்கமழ் நெடுவரைப் பிறங்கிய
        வேங்கட வைப்பிற் சுரன்இறந் தோரே.

தோழி! நான் சொல்வதனைக் கேள்: நீ வாழ்வாயாக!” இரவுதோறும் கனாவும் மிக்க இனியவாகின்றன. நனவிடத்தும் சித்திரத் தொழிலினால் அலங்கரித்த நல்ல இல்லிலே, புள் நிமித்தமும் நல்லவிடத்தில் உண்டாகின்றன; என் நெஞ்சமும் ஒடுங்காது மிகவும் விரும்பி அமைந்திருக்கும்; -

ஏர்த்தொழில் மடிந்து, அதனாலே உலகிலுள்ள மற்றைத் தொழில்களும் கெடும்படி மழையானது பெய்யும் இடத்தை விட்டுச் சென்ற ஆகாயத்திலே, சிறுமுயலாகிய மறுவானது தன் மார்பகத்தே விளங்கச் சந்திரன் நிறைந்தவனாகி, உரோகிணி தன்னுடன் சேரும் இருளகன்ற நடு இரவில், அஃதாவது திருக்கார்த்திகைத் திருவிழா நாளின் இரவில், வீதிகளிலே