பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 47


விளக்குவைத்து, மாலைகளைத் தொங்கவிட்டுப் பழைமையைத் தனக்குப் பெருமையாகவுடைய மூதூரில் பலருடன் கலந்து கொண்டாடும் விழாவினை, நம்மோடு கூடிக் கொண்டாடும் வணனம;

முற்றவுலர்ந்து, தூயமலரோடு நெருங்கி, மயிர்ச் சாந்து கமழும் குளிர்ந்த நறிய தலைமயிரினையுடைய புதிய மணப் பெண், உணவுமிகுந்த திருமணவீட்டிலே பல பக்கங்களையுடைய அடுப்பிலே, பாலை உலையாக வைத்து, கூழையாகிய கூந்தலையும் குறிய தொடியினையுமுடைய மகளிரொடு, பெரிய வயலிடத்து விளைந்த நெல்லின் வளைந்த கதிரை முறித்துப் பசிய அவலை இடிக்கும் கரிய வயிரமுடைய உலக்கையினது விரைந்த இடிக்கு, வெருவிய நிறைந்த சூலையுடைய வெள்ளிய குருகானது, தீவிய குலையையுடைய வாழையின் ஓங்கியமடலின்கண் இராது, நெடிய காலையுடைய மாவினிடத்துக் குறுமையாகப் பறத்தலைச் செய்து சென்று தங்கும், கெட்ட குடியைக் கைதுக்கி உயர்ந்து நிறுவிய பெரிய புகழையும், வெற்றிகொள்ளும் போரினையுமுடைய இடையாற்றைப் போல நல்ல செல்வத்தை ஈட்டும் பொருட்டாக,

கற்பாறையிடையே வளர்ந்த வேங்கையினது பல புள்ளிகளையுடைய புலி நிறத்தைக்கொண்ட பூவினிடையே, பெரிய கொம்பினையுடைய நாரத்தையின் நறிய, அழகிய, அன்று பூத்த மலர் உதிரும்படி முசுக்கலை என்ற ஆண்குரங்குகள் பாய்ந்து துள்ளும், தேனிறால்கள் கமழா நிற்கும் நெடிய பக்க மலைகளால் உயர்ந்த வேங்கடக் கோட்டத்தையடுத்த ஊர்களின் கண்ணுள்ள சுரத்திலே சென்ற நம் தலைவர்,

வருவாராக என்று, பிரிவிடையாற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தனள் என்று கொள்க.

சொற்பொருள்: 1. கைம்மிக இனிய - மிகுதியும் இனிய வாகின்றன. 3. புனைவினை நல்லில் - சித்திரங்களால் அலங்கரிக்கப் பெற்ற நல்ல வீடு, புள் - நிமித்தம். 5. நாஞ்சில் கலப்பை. நாஞ்சில் துஞ்சி என்றதால், ஏர்த்தொழில் இல்லாதாகி என்க. 8. அறுமீன் - உரோகணி. 12. துவர முற்றவும். களுலி - நெருங்கி. 13. தகரம் - மயிர்ச்சாந்து, 14 அயினிய - உயவுமிகுந்த, கடிநகர் - திருமணவீடு.18. காழ் - வைரம். 19. கமஞ்சூல் - நிறைந்த சூல் 23 இடையாறு என்பது, ஒர் ஊர். 24. வெறுக்கை செல்வம். 26. நரந்தம் - நாரத்தை. - -

விளக்கம்: கனவு கங்குல் தோறும் இனியவாதலாலும், கனாமுந்துறாத வினை இல்லை என்பதாலும், தலைவர் விரைந்து