பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

அகநானூறு - மணிமிடை பவளம்


மிகவும் வருந்தினாள். தலைவன்மீது அவளுக்கு வருத்தமும் உண்டாயிற்று. அவனிடம் வந்து, 'அவள் வருத்தத்தைக் கண்டு யான்தான் நோகின்றேன்: நின்பால் அவளுக்காக இரக்கப்படுகின்ற அருள் உள்ளத்தைக் காணோம்’ என்றாள். அதனைக் கேட்ட அவன் மனம் மாறியவனாகத் தான் போவதையே நிறுத்திவிட்டான்.)

        செய்வினைப் பிரிதல் எண்ணிக், கைம்மிகக்
        காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்
        நீடுசினை வறிய வாக, ஒல்லென
        வாடுபல் அகலிலை கோடைக்கு ஒய்யும்
        தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கெழுபு 5

        முளிஅளிற் பிறந்த வளிவளர் கூர்எரிச்
        சுடர்நிமிர் நெடுங்கொடி விடர்முகை முழங்கும்
        ‘வெம்மலை அருஞ்சுரம் நீந்தி-ஐய!
        சேறும் என்ற சிறுசொற்கு... இவட்கே,
        வசைஇல் வெம்போர் வானவன் மறவன் 10

        நசையின் வாழ்நர்க்கு நன்கலஞ் சுரக்கும்,
        பொய்யா வாய்வாள், புனைகழல் பிட்டன்
        மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன்
        அகல் அறை நெடுஞ்சுனை, துவலையின் மலர்ந்த
        தண்கமழ் நீலம் போலக், 15

        கண்பனி கலுழ்ந்தன; நோகோ யானே.

ஐயனே! பொருளினைத் தேடிவருகின்ற ஆள்வினையின் பொருட்டாக, எம்மைப் பிரிந்து வேற்றுநாடு செல்லுதலைக் குறித்து எண்ணுகின்றாய்.

“ஞாயிற்றினது கதிர்கள் காட்டினது கவினெல்லாம் அளவுக்குமீறி அழிந்து போகுமாறு கடுமையாக எரித்துக் கொண்டிருக்கும்; தேக்கு மரங்களின் உயர்ந்த கிளைகளிலே யிருந்த பலவாகிய அகன்ற இலைகள் எல்லாம் வாடிப்போய், ஒல்லென்ற ஒலியுடன் மேற்காற்றினிலே உதிர்க்கப்பட்டுப் போகும்; அதனால், தேக்கின் நீண்ட கிளைகளும் வறுமையடைந்தவரைப்போல வளமற்று விளங்கும்; சாய்ந்த தூறுகளிலே நெருப்புப் பற்றிக் கொள்ளும்; காற்று வீசுவதனால் அது எங்கும் படர்ந்து மென்மேனும் வளர்ந்து ஒங்கும்; உயர்ந்த நெடிய செங்கொடிபோலத் தோன்றும் அந் நெருப்பின் கொழுந்துகள் மலைக்குகைகளினுள்ளேயும் சென்று முழங்கும். இத்தகைய வெம்மை வாய்ந்ததும், கடந்து போவதற்கு