பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 61


முயன்றாள் தோழி. தோழியின் சொற்களைக் கேட்ட தலைவியின் வருத்தம் மிகுந்ததேயல்லாமல் குறைய வில்லை. நான். அவனைத் தேடிப்போவதற்கு விரும்புகிறேன். என்றாள் அவள்)

        ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
        வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்னை
        ஊன்பொதி அவிழாக் கோட்டுகிர்க் குருளை
        மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்த,
        துறுகல் விடாளைப் பிணவுபசி கூர்ந்தெனப், 5

        பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை
        அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஒர்க்கும்
        நெறிபடு கவலை நிரம்பா நீளிடை,
        வெள்ளி வீதியைப் போல நன்றும் செலவு
        அயர்ந் திசினால் யானே; பல புலந்து, 10

        உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சா அய்,
        தோளும் தொல்கவின் தொலைய, நாளும்
        பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
        மருந்துபிறிது இன்மையின், இருந்துவினை இலனே!

ஓங்கிய மலையை அடுத்த சாரலிலே பிடவுடனே மலர்ந்த, வேங்கையின் வெறிகமழும் தழையை வேறாக வகுத்தாற் போன்ற, தசையின் மூட்டம் விரியாத வளைந்த நகத்தையுடைய குட்டிகள் மூன்றை, முடக்கமான இடத்திலுள்ள பொற்றைக்கற் பிளப்பாகிய குகையிலே, ஒருசேர ஈன்றதனால் ஒய்ந்த பெண்புலி, அறும் கோட்டையுடைய ஆண் உழைமானின் குரலை உற்றுக் கோளாநிற்கும், முடக்கம் அமைந்த கவலைகளாகிய ஒடுங்கிய நெடிய வழியிலே -

பிரிந்த தலைவரது பிரிவுக்குத் தினமும் இரங்கி, வெள்ளி வீதியைப்போலச் செல்லப் பெரிதும் விரும்பின யான், புலந்து உண்ணாத வருத்தமொடு, உயிர்செல்ல ஒய்ந்து, தோளும் பண்டையழகு கெடப் பலவற்றிற்கும் இருந்தும், பிறிது மருந்து இன்மையாற் செயலற்றேன்;

என்று, செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொன்னாள் என்க.

சொற்பொருள் : 1. ஓங்குமலை - உயர்ந்தமலை, 2. வெறி த்தழை - வெறிநாற்றம் உடைய தழை.3 கோட்டு உகிர் - வளைந்த நகம். 4. நிழத்த ஒய்ந்த முடங்கர் - முடங்கல்கள்: 5. துறுகல் - பாறை விடர் அளை - மலைப் பிளப்புக்களாகிய குகை பிணவுபெண்புலி. 6. அறுகோடு - அறல்பட்டு விளங்கும் கொம்பு.