பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அகநானூறு - மணிமிடை பவளம்


‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்துப் பேராசிரியர் காட்டினர்.

பாடபேதங்கள்: 2. வம்புடைக் கண்ணுருத்து 4. எல்லிவள்.

151. அருள் பிரிது ஆயினர்!

பாடியவர்: காவன் முல்லைப் பூதனார். திணை: பாலை. துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.

(தலைவன் தன்னையும் உற்றார் உறவினரையும் பிரிந்து, வறியவர்க்கு உதவப் பொருள்தேடி வரும் பொருட்டாகச் சென்று விட்டதான அருளற்ற செயலை நினைந்து நினைந்து வருந்துகிறாள் தலைவி)

        ‘தம்நயந்து உறைவோர்த் தாங்கித் தாம்நயந்து
        இன்னமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
        நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!’ என,
        மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு அருள்பிறிது
        ஆபமன்-வழி, தோழி! கால் விரிபு 5

        உறுவளி எறிதொறும் கலங்கிய பொறிவரிக்
        கலைமான் தலையின் முதன்முதற் கவர்த்த
        கோடலம் கவட்ட குறுங்கால் உழுஞ்சில்
        தாறுசினை விளைந்த நெற்றம், ஆடுமகள்
        அரிக்கோற் பறையின், ஐயென ஒலிக்கும் 10

        பதுக்கை ஆய செதுக்கை நீழற்,
        கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்கு
        உறுவது கூறுஞ், சிறுசெந் நாவின்
        மணிஓர்த் தன்ன தெண்குரல்
        கணிவாய்ப் பல்லிய காடிறந் தோரே! 15

புள்ளிகளையும் வரிகளையும் உடையது கலைமான். அதன் தலையிலே முதன் முதலாகக் கப்புவிட்டிருக்கும் கொம்பினைப் போலக் கவடுபட்டு விளங்கும் குறுகிய அடிமரத்தினையுடையது வாகைமரம். அதன் கிளையிலே, விளைந்த நெற்றின் குலைகள் எங்கும் பரந்து, மிகுதியான காற்று வீசும் போதெல்லாம், ஆடும் கூத்தியர்களது அரிக்கோற் பறையொலி போல ஐயென்ற ஒலியுண்டாக்கிக் கொண்டிருக்கும். சிறிய செந்நாவினால் மணியொலி கேட்டாற்போன்று தெளிந்த குரலைச் செய்யும் நன்னிமித்தம் கூறும் பல்லிகள், பதுக்கை பட்டதும் குறைந்த ‘நிழலுடையதுமான கள்ளியின் முள்பொருந்திய அடிப்புறங்-