பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

அகநானூறு -நித்திலக் கோவை



காட்டுவழியின் கடுமையினையும் கொடுமையினையும் கூறுபவன், அதனை நினையாது தன் காதலியை நினைந்த, தன் மனத்தின் காதல் பெருக்கினையும் உரைத்தனன்.

'பார்ப்பனர் தூது செல்லும் தொழிலுடையவர்' என்ற செய்தி இதன்கண் உரைக்கப்பெற்றைமை காண்க. 'வெள்ளோலை' தூதுக்குரிய செய்தி எழுதப்பெற்ற ஒலைச் சுருள் ஆகும்.

338. தூது இடையின்றிச் செல்க!

பாடியவர்: மதுரைக் கணக்காயனார். திணை: குறிஞ்சி. துறை: அல்ல.குறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: மூவேந்தரும் சிறப்பிக்கப்பெற்ற தன்மை.

(தன்னுடைய காதலியைச் சந்திப்பதற்காகக் குறிக்கப்பட்ட இடத்திலே, சந்தித்துக் கூடி மகிழ்கின்ற பெருவிருப்பத்துடன் வந்தனன் தலைவன் ஒருவன். அவனுடைய ஆர்வம் அன்று நிறைவேறவில்லை. அவளைக் காணாமல், அவன் வறிதே திரும்ப வேண்டியதுமாயிற்று. அப்படித் திரும்புகின்றவன் அவளை அடைதற்கு இயலாத தன் நிலைக்கு நொந்து கூறுகின்ற தன்மையில் அமைந்தது இச்செய்யுள்.)

குன்றோங்கு வைப்பின் நாடுமீக் கூறும் மறம்கெழு தானை அரச ருள்ளும்
அறம்கடைப் பிடித்த செங்கோ லுடன் அமர்
மறம்சாய்த்து எழுந்த வலன்உயர் திணிதோள்

பலர்புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன்
5


அணங்குடைய உயர்நிலைப் பொறுப்பின் கவாஅன்
சினையொண் காந்தள் நாறும் நறுநுதல்
துணைஈர் ஒதி மாஅ யோள்வயின்
நுண்கோல் அவிர்தொடி வண்புறஞ் சுற்ற

முயங்கல் இயையாது ஆயினும் என்றும்
1O


வயவுஉறு நெஞ்சத்து உயவுத்துணை யாக
ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும்
துன்னருந் துப்பின் வென்வேற் பொறையன்
அகலிருங் கானத்துக் கொல்லி போலத்

தவாஅ லியரோ நட்பே அவள்வயின்
15


அறாஅ லியரோ துதே - பொறாஅர்
விண்பொரக் கழித்த திண்பிடி ஒள்வாள்
புனிற்றான் தரவின் இளையர் பெருமகன்