பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

அகநானூறு - நித்திலக் கோவை


சொற்பொருள்: 1. குன்று மலை; ஒங்குதல் - உயரமுடையவாய் அமைந்திருத்தல். வைப்பு - உலகம். மீக்கூறும் - மிகுதியாகப் போற்றிப் பேசும், 3. கடைப்பிடித்த மேற்கொண்ட செங்கோல் - செங்கோன்மை வழுவாத ஆட்சி 4. சாய்த்து அழித்து. எழுந்த - பூரித்து எழுந்த வலன் உயர் - வெற்றியாற் சிறப்புற்ற, திணிதோள் - திண்மையான தோள்கள். 5. திரு . செல்வம் , 6. அணங்கு - தெய்வம். உயர்நிலை - உயர்வுடன் நிலைபெற்ற தன்மை. பொருப்பு - மலை; இங்கே பொதியிலைக் குறித்தது. 7. சினை கிளை. 8 மாஅயோள் - மழை நிறத்தினள், திருமகள் போல்வாளும் ஆம் ஓதி கூந்தல்.9. வண்புறம்-வளவிய முதுகுப்புறம் 10. முயங்கல் - தழுவுதல் 11 வயவுறு வேட்கை - உறுதல்ையுடைய உயவுத்துணை - உசாத் துணை. 12. நூறல் அழித்து - வெற்றி கொள்ளுதல். 13. துன்னரும் துப்பு - நெருங்கற்கும் அரிதான வலிமை. 14. அகல் இரும் கானம் - அகற்சியினையுடைய மரச்செறிவினாலே இருள்கொண்ட காடு. 15.தவா அலியர்-கெடாது நிலைபெறுமாக.18.புனிற்றுஆஈன்ற தன் அணிமையினையுடைய பசுக்கள். தரவின் - கவர்ந்து தருதலையுடைய. இளையர் - வீரர். ஏவலரும் ஆம் 19. தொகு போர் - தொகையான போர் அடுத்தடுத்து விளையும் போர். பாக்கம் - கடற்கரையூர்; புகாரின் பட்டனப்பாக்கம் எனலும் ஆம் 21. முந்நீர் - கடல்.

விளக்கம்: 'அணங்குடை உயர்நிலைப் பொறுப்பின் கவாஅன் சினையொண் காந்தள்' எளிதிற்பெற இயலாவாறு போன்று, 'அவள் கரங்களால் தழுவப்பெற்று உயர்தலும் எமக்கு இன்று வாயாவாயிற்று' என்றனன். இதனால் தலைவன் அல்ல.குறிப்பட்டவன் என்பதும். தலைவியின் குடிச்சிறப்பும், அவளை அடைதற்கான அருமையும் அறியப் பெற்றனம்.

அவள், இவன் நெஞ்சத்துக்கு உயவுத் துணையாவது, அவளைத் தன் மனத்துள் இடையறாது நினைத்தலை உடையவனாகி, அவ்வளவிலே அவளைத் தன் நெஞ்சத்து நிறைந்தவளாகக்கொண்டு அவன் அமைதல். 'கொல்லிபோல’ என்றது அதுவும் அடைவதற்கு எளிதாயதன்றி நெஞ்சினால் நினைந்து போற்றும் உயர்நிலையுள்ளதாகவே விளங்குதலினால்.

இடையறாத தூதுக்குப் பாக்கத்துறையிடத்து வழங்கும் இடையறாத அலைகளைக் கூறியது, தூதும் சென்று சென்று வறிதே மீளுகின்ற செயலினை உடைமையினாலே யாகும்.

இச் செய்யுளின்கண் மூவேந்தரது சிறப்பும் ஒருசேரக் கூறப்பட்டமை அறிந்து இன்புறுக. பாண்டியர் சேரர்