பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 91


மலைகளும், சோழரின் பொருள்மலி பாக்கமும் கூறப்பெற்றன வென்பதும் காண்க.

339. உறவி போன்றனம்!

பாடியவர்: நரைமுடி நெட்டையர்: சிறைமுடி நெட்டையார் எனவும் பாடம். திணை: பாலை. துறை: போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(அற்சிரக் காலத்தே, வேந்துவினை முடித்தலின் பொருட் டாகத் தலைவியைப் பிரிந்து செல்லவேண்டிய நிலையிலே இருந்தனன் ஒரு தலைவன். அவன், தன்தலைவியிடத்து மிகுதியான காதலன்பு கொண்டவன். ஆண்மையும் காதலும் அலைமோத அவன் உள்ளம் படுகின்ற துயரத்தினைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

வீங்குவிசைப் பிணித்த விரைபரி நெடுந்தேர்
நோன்கதிர் சுமந்த ஆழிஆழ் மருங்கிற்
பாம்புஎன முடுகுநீர் ஓடக் கூம்பிப்
பற்றுவிடு விரலின் பயறுகாய் ஊழ்ப்ப

அற்சிரம் நின்றன்றாற் பொழுதே முற்பட
5


ஆள்வினைக்கு எழுந்த அசைவில் உள்ளத்து
ஆண்மை வாங்கக் காமம் தட்பக்
கவைபடு நெஞ்சம் கட்கண் அகைய
இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி

ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்
10


நோம்கொல்? அளியள் தானே - யாக்கைக்கு
உயிர்இயைந் தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவுஅரி யோளே.

மிக்க விரைவுடனே விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப் பெற்ற நெடிய தேரின், வலிய ஆரக்கால்களைக் கொண்ட உருள்கள் அகழ்ந்து செல்லும் இடங்களிலே, பாம்பு செல்வதுபோல வேகமாக நீர் ஓடிக்கொண்டிருக்கவும், குவிந்து பற்றுநீங்கின விரல்களைப்போன்றவாகப் பயற்றுச் செடிகளிற் காய்கள் முற்றியவையாக விளங்கவும் அமைந்த, பனிப் பருவமாகப் பொழுதும் அமைந்துள்ளது.

ஆள்வினை குறித்து எழுந்த தளர்வற்ற உள்ளத்தின் ஆண்மையானது, முற்படச் செல்லுமாறு நம்மை இழுக்கின்றது. காமமானது செல்லவிடாது தடுக்கின்றது. இவ்வாறு,