பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

அகநானூறு -நித்திலக் கோவை


சொற்பொருள்: 1. ஒறுத்தல் - வன்சொற் கூறித் தடுத்தல்; நிறுத்தல் தடுத்து நிறுத்த முயலுதல். 2. புணர்ந்தோர் - கலந்த நட்பினர். 3. கிளைஞன் உறவினன். 4. கவுரியர் - பாண்டியர். 5. அருப்பு - காட்டரண். உழை - இடத்து. 7. மேவார் - பொருந்தாதோர்; பகைவர்; 8. குறும்பு - சிற்றரண் எறிதல் - அழித்தல், 9. செரு - போர்; செல் உறழ் தடக்கை - இடியுடன் மாறுபடும் பெரிய கை; அடிபட்டவர் மீளார் என்பது கருத்து. செல் - மேகம் ஆம்; அப்போது மேகத்தோடு மாறுபடும் பெரிய கை என்க. இது வள்ளன்மை மிகவுடைமையைக் குறிப்பதாகும். அடுத்துவரும், 'கெடாஅ நல்லிசை' என்றதற்கு இப்படிப் பெருங் கொடையாண்மை கொண்டவன் என்றலே சிறப்பாக அமையும். 10. தொடாஅ நீர் - தோண்டப் பெறாத நீர் மழை நீர் என்பது கருத்து. 11. நீரிழி மருங்கிற் கல்லளை- அருவிக்கண்ணதாகிய மலைக்குகை என்க. வரையர மகளிர் - மலையுறு தெய்வங்கள்.

விளக்கம்: 'தலைவி அடைதற்கு அரியவள்' எறு கூறுவான், 'பாண்டியரின் பல்வேறு பேராற்றல்களையும் கூறி, அவருக்கு உரியதான மலையிடத்து அருவிக்கரை மலைக்குகையுள் மறைந்திருக்கும் வரையர மகளிரைப்போல அடைதற்கு அரியவள்' என்றனன். 'நிரையிதழ் குவளைக் கடிவீ தொடினும் வரையர மகளிர் இருக்கை காணினும், உயிர் செல வெம்பிப் பனித்தலும் உரியிர்' என்று உரைக்கும் மலைபடுகடாம் (189, 191) இவர் காட்சியே காண்பார்க்கு உயிர்க்கிறுதி விளைக்கும் தன்மையுடைத்து என்று கூறும். இதனால், அவரை அடைய இயலாத தன்மை நன்குபுலனாகும்.

குறும்பு அரண் 'கொடுவில் எயினர் குறும்பில்') பெரும்பாண். 129) என உரைத்தலும் காண்க

நெஞ்சத்தை, 'அவளை நினையாதிருக்குமாறு கூறிக் கடிந்து கொண்டும் பயனில்லை; தன் வயமாக நிறுத்தற்கு முயன்றும் இயலுமாறில்லை’ என்பான், 'ஒறுப்ப ஒவலை; நிறுப்ப நில்லலை' என்றனன். இது அவனுடைய வேட்கையின் மிகுதியினை உரைப்பதாகும். அதனைத் தடுக்கமாட்டாது அவன் கொண்ட பெரிதான கலக்கத்தினையும் காட்டுவதாகும்.

மேலும், தலைவி இற்செறிக்கப்பட்டதனையும், அவள் மனையின் கடிகாவல் உடைமையும், இதனால் உய்த்து உணரவும் படும். இதனால் அவளை மணம்வேட்டு வருதலைப்பற்றிய நினைவிலே அவனுள்ளம் செல்லும் என்பதும் அறிதல்

வேண்டும்.