பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iv

இத்தொகைப்பாட்டிற்கு அடியளவு சிறுமை பதின் மூன்று: பெருமை முப்பத்தொன்று. தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுத்தான் மதுரை உப்பூரிகுடிகிழான் மகனாவான் உருத்திர சன்மன் என்பான்.

"வண்டு படத் ததைந்த" என்பது முதலாக, "நெடுவேள் மார்பின்” என்பதறாகக் கிடந்த நூற்றிருபது பாட்டும் “களிற்றி யானை நிரை” இப்பெயர் காரணப்பெயர்; செய்யுட் காரணமோ பொருட்காரணமோ எனிற் பொருட் காரணம் என உணர்க.

"நாணகையுடைய நெஞ்சே” என்பது முதலாக, "நாள் வலை" என்பதீறாகக் கிடந்த நூற்றெண்பது பாட்டும் “மணி மிடை பவளம்” இப்பெயர் உவமையாற் பெற்ற பெயர்; செய்யுளும் பொருளுந் தம்முள் ஒவ்வாமையால்.

“வறனூறு” என்பது முதலாக "நகை நன்று” என்பதீறாகக் கிடந்த பாட்டு நூறும் "நித்திலக் கோவை" இவை செய்யுளும் பொருளும் ஒக்குமாகலின்.

வியமெல்லாம் வெண்டேர் இயக்கங் கயமலர்ந்த
தாமரையா றாகத் தகைபெறீஇக் காமர்
நறுமுல்லை நான்காக நாட்டி நெறிமாண்ட
எட்டும் இரண்டுங் குறிஞ்சியாக் குட்டத்து
இவர்திரை பத்தா இயற்பட யாத்தான்
தொகையின் நெடியதனைத் தோலாச் செவியான்
வகையின் நெடியதனை வைப்பு.

1

ஒன்றுமூன் றைந்தே ழொன் பான்பாலை; யோதாது
நின்றவற்றி னான்கு நெறிமுல்லை;-அன்றியே
யாறா மருதம்; அணி நெய்த லையிரண்டு
கூறாதவை குறிஞ்சிக் கூற்று.

2

பாலை வியமெல்லாம் பத்தாய்; பனிநெய்த
னாலு நனிமுல்லை நாடுங்கான் - மேலையோர்
தேறு மிரண்டெட் டிவைகுறிஞ்சி செந்தமிழின்
ஆறு மருதம் அகம்.

3