பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

அகநானூறு - நித்திலக் கோவை


யுடைய குதிரைகளுடன் யானைகளும் பலவாகப் பற்றிக் கொண்டு, பகைமன்னரின் ஊரினையும் தன்வசப்படுத்திக் கொள்ள, அதனையறிந்த கோதை மார்பன் கொண்ட மகிழ்வினும் பெரிதாக உவப்படைந்தனள் அல்லளோ?

யாமோ, அந்த உவகையினைக் கருதியவரும் அல்லேம். அங்ஙனமாகவும், நீ வந்து, தலைவியை விழைவது நன்கு நகைப்பதற்கே உரிய நிலையாகும்.

சொற்பொருள்: 1. நகை நன்று - நகையும் நன்றாக உள்ளது. இறை இறைப்பு.2. சுதையின் - சுண்ணாம்பு பூசப் பெற்ற 3. கூரல் - இறையினையுடைய குறும்பறை - குறுகப் பறத்தலையுடைய. 4. வெண்தோடு - வெள்ளிய இதழ். குறித்து கருதி, கயலைப் பற்றி உண்ணுதலைக் குறித்ததாக. 5. கலிமகிழ் - மிக்க மகிழ்வு. 6. குறுந்தறி - குறுகிய கட்டைகள். குத்தி - அடித்து ஊன்றி. 7. நன்பல மிடைந்து - மிகப் பலவற்றை வைத்து அடைத்து. 8.பெருஞ்செய் நெல்லின்-நெல்லின் பெருஞ்செய் எனக் கூட்டிப் பொருள்கொள்ளுக. பாசவல் பொத்தி - பசிய பள்ளங்களை அடைத்துத் தேக்கி. 9. வருந்திக் கொண்ட வருத்தமுடன் அமைத்துக் கொண்ட கொடுஞ்சிறை - வளைவான அணை. 11. பார்வல் இருக்கும் - பதுங்கிப் பார்த்தபடியே இருக்கும். 13. விசிபிணி இழித்துக் கட்டிய 15. மகிழ்துணைச் சுற்றம் - உரிமைச் சுற்றம். 14. மண்ணார் முழவு - மார்ச்சனை கொண்ட முழவு. மட்டு - கள். 18. குறுந்தொடி மடந்தை குறுகிய தொடியுடையவளாகிய பரத்தை 22. சாஅய் அழித்து. 24 ஏதின் மன்னர்-பகை மன்னர்.

விளக்கம்: "கொக்குச் சேவல் கயம் குறித்துக் கொடுஞ் சிறை மீது அழி கடுநீர் நோக்கிப் பார்வலிருக்கும் என்றது, தலைவன் தன் உளங்கொண்ட இளையாளாய பரத்தையை அடைதலை விரும்பித் தக்க பொழுதினைப் பார்த்தவனாக இருந்தான் என்றதாம்.

தலைவனின் செயலினாலே தலைவி அழிவுற்று வருந்துதலையும், அதற்கு இரங்காது அவனைப் பெற்றமைக்கு மகிழ்தலையும் மேற்கொண்ட பரத்தையின் நிலைக்குக், கிள்ளி வளவனாலே அழிவுற்ற பழையன் மாறனின் நிலைக்கு மகிழ்ந்த கோதை மார்பனின் தன்மையைக் கூறினார். இதனால், அப்பரத்தைமீது தனக்குள்ள பகைமையினையும் உரைத்தனளாம்.

தலைவனை இவ்வாறு தோழி பழித்துக் கழிப்பக், கற்புடையாளாகிய தலைவி தலைவன்மீது அன்பு உடையவளாதலால், அவனுக்குப் பரிந்தவளாகித் தன் ஊடலும் நீங்கியவளாவாள் என்று கொள்ளுக.