பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

அகநானூறு - நித்திலக் கோவை



தோழியே! நீ வாழ்க!

என் தோள்களும் தம் பழைய அழகனைத்தும் கெட்ட வாயின. அழகினைக் கவர்ந்துகொள்ளும் பசலையும் நாளுக்கு நாள், நம்பால் அருளில்லாததாகி நம்மைப் படர்ந்து நலியச் செய்கின்றது. நாம் இங்ஙனமாக-

நிறைந்த பெரும் படையினை உடையவன் சேரலாதன். அவன், பெரிதான கடலிடத்துப் பகைவரை ஓட்டினான். அவரது காவன் மரமாகிய கடம்பினை வெட்டி, அதனால் பண்ணுதல் அமைந்த வெற்றி முரசினையும் செய்வித்துக் கொண்டான். அந்த முரசின் கண் அதிர்வதைப் போன்ற தன்மையுடனே, நம் முதுரினிடத்தே கொடிய வாயினை உடையவரான பெண்டிரது அம்பலும் அலரும் எழுந்து பழி தூற்றுவதாயிற்று. இவையெல்லாம் நமக்காக வைத்தவாரக அவரும் நம்மைப் பிரிந்து சென்றனர். ஆயினும்-

மழை பெய்தலற்று மறைந்து ஒளித்துக் கொண்டமையினாலே, மூங்கில்களும் வாடிப்போயுள்ள பக்கமலையிடத்தே, ஒளியுடைய நிறத்தைக் கொண்ட வலிமையுள்ள புலியானது பாய்ந்ததாக, திரண்ட அடியினையும் வெள்ளிய கோட்டினையும் உடைய யானையானது முழக்கமிடும். அந்த முழக்கத்தைக் கேட்டுத் தன் கன்றினையும் கைவிட்டு ஓடியது புல்லென்ற தலையினையுடைய அதன் பிடி யானை. தலைமீது கையினை வைத்துக்கொண்ட மயக்கமுற்ற விரைவுடனே, தம் மகவினைக் காணாது வருந்திய மகளிர் தேடித் திரிவதுபோல, அந்தப் பிடியும் தன் கன்றினைப் பின்னர்த் தேடித் திரிந்து கொண்டிருக்கும், நீண்ட மரங்களைக் கொண்ட சாரலையுடைய அத்தகைய மலைவழியினையும் கடந்து சென்றுள்ளனர் அவர். அதனால்-

அவருக்கு, அவர் செய்யக் கருதிச் சென்ற வினையானது நன்கு கைகூடுவதாக.

சொற்பொருள்: 2. நன்கு இன்று நலிய அருள்தலற்றுப் படர்ந்து வருத்த 8. சால் பெருந்தானை நிறைந்த பெரும் படை நிறைவு படையுறுப்புக்கள் அனைத்தும் பொருந்திய தன்மை. 4. மால்கடல் பெருங்கடல். 5. பண்ணமை முரசு - பண்ணுதல் அமைந்த வெற்றி முரசம், 6. கவ்வை தூற்றல் - பழிதுாற்றல். 9. வாய்க்கதில் வாய்க்குமாக; தில், விழைவுப் பொருளில் வந்தது. 11. ஒண்கேழ் வயப்புலி - ஒள்ளிய நிறத்தையுடைய வலியுள்ள புலி. குவவடி - திரண்ட அடி. 12. முழக்கிசை - முழங்கும் ஒலி. 13. புன்றலை புல்லென்ற தலையினையுடைய 15. கெடுமகப் பெண்டிர் - மகவைக் கெட்டுப் போக்கிய தாய்மார்.