பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அகநானூறு-நித்திலக்கோவை
301. மன்றமும் மகளிர் நிலையும்

பாடியவர் : அதியன் விண்ணத்தனார். திணை : பாலை, துறை : பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது.

(தலைவன் தலைவியைப் பிரிந்து வேற்றுநாடு சென்றிருந்த காலம். அவனை நினைந்து நினைந்து அவள் ஏக்கங் கொண்டிருக்கிறாள். அதனால் ஏற்பட்ட அவளுடைய மெலிவைக் கண்டு, உள்ளம் வாடினாள் அவளுடைய தோழி. 'அந்த நினைவைச் சற்று மறந்திருப்போம்' என்று ஆறுதல் கூறவும் முற்பட்டாள். அந்தத் தோழிக்குத், தலைவி தன்னுடைய மனநிலையினை விளக்கிக் கூறுவதாக அமைந்தது இச்செய்யுள்)

‘வறன் உறு செய்யின் வாடுபு வருந்திப்
படர்மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறுநணி ஆன்றிகம் என்றி - தோழி -
நலிகுநர் ஒழித்த கூலிச் சில்பதம்

ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு
5


நீர்வாழ் முதலை ஆவித் தன்ன
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து
ஊர்இஃது என்னாஅர் ஊறில் வாழ்க்கை
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டிப்

பாடுஇன் தெண்கிணை கறங்கக் காண்வரக்
1O


குவிஇணர் எருக்கின் ததர்பூங் கண்ணி
ஆடுஉச் சென்னித் தகைப்ப மகடூஉ
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக்
களரி யாவிரைக் கிளர்பூங் கோதை

வண்ண மார்பின் வனமுலைத் துயல்வரச்
15


செறிநடைப் பிடியோடு களிறுபுணர்ந் தென்னக்
குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந் திசைப்பக்
கார்வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மாணச் சீர் அமைத்துச்

சில்லரி கறங்கும் சிறுபுல் லியத்தொடு
2O


பல்லூர் பெயர்வனர் ஆடி ஒல்லெனத்
தலைப்புணர்த்து அசைத்த பல்தொகைக் கலப்பையர்