பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

அகநானூறு - நித்திலக் கோவை


351. எழுது சுவர் நினைந்தாள்!

பாடியவர்: பொருந்தில் இளங்கீரனார். திணை: பாலை. துறை: பொருண்முற்றி மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(தலைவன் ஒருவன் பொருள்தேடி வருதலின் பொருட்டாகத் தன்னுடைய ஆருயிர்க் காதலியைப் பிரிந்து வேற்று நாட்டிற்குச் சென்றிருந்தனன். செய்வதற்குக் கருதிய வினை முற்றுப்பெற்று, அவன் மீண்டும் தன்னுடைய ஊரினை நோக்கியவனாக வந்துகொண்டும் இருக்கின்றான். அப்போது அவன் மனம், தன் பிரிவினை நினைந்து ஏங்கியிருக்கும் தன் தலைவியின் நினைவிலே செல்ல, அவன், தன் நெஞ்சுடன் கூறிக்கொள்வதாக அமைந்த செய்யுள் இது)

          வேற்றுநாட்டு உறையுள் விருப்புறப் பேணி
          பெறல்அருங் கேளிர் பின்வந்து விடுப்ப
          பொருள் அகப் படுத்த புகல்மலி நெஞ்சமொடு
          குறைவினை முடித்த நிறைவின் இயக்கம்
          அறிவுறூஉம் கொல்லோ தானே - கதிர்தெற 5

          கழலிலை உகுத்த கால்பொரு தாழ்சினை
          அழல் அகைந் தன்ன அம்குழைப் பொதும்பில்
          புழல்வி இருப்பைப் புன்காட்டு அத்தம்
          மறுதரல் உள்ளமொடு குறுகத் தோற்றிய
          செய்குறி ஆழி வைகல்தோறு எண்ணி 10

          எழுதுசுவர் நினைந்த அழுதுவார் மழைக்கண்
          விலங்குவீழ் அளிப்பனி பொலங்குழைத் தெறிப்ப
          திருந்திழை முன்கை அணல் அசைத்து ஊன்றி
          இருந்துஅணை மீது பொருந்துவீக் கிடக்கை
          வருந்துதோள் பூசல் களையும் மருந்தென 15

          உள்ளுதொரு படுஉம் பல்லி
          புள்ளுத்தொழுது உறைவி செவிமுத லானே?

நெஞ்சமே வேற்று நாட்டிலே தங்குதலை விருப்பமுடன் மேற்கொண்டனை. பெறுதற்கரிய சுற்றத்தினர் பின்வந்து விடைதந்து அனுப்ப வந்தனை பொருளினை ஈட்டிக்கொண்ட விருப்பம் மிகுந்த நெஞ்சத்துடனே, குறைப்பட்ட செயலினை முடித்த நிறைவினாலே உண்டாகிய இயக்கத்தினையும் பெற்றுள்ளனை!

ஞாயிற்றுக் கதிர்கள் வெதுப்புதலால், கழன்ற இலைகளை உதிர்த்த, காற்றுப் பொருந்திய தாழ்ந்த கிளைகளிலே, நெருப்புக்