பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 121


கொழுந்துவிட்டு எரிந்தாற்போல விளங்கிய அழகிய தளிர்களையுடைய மரச்செறிவிலே, உட்டுளைகொண்ட பூக்களையுடைய பொலிவற்ற இருப்பைமரக் காட்டின் வழியூடே, மீண்டும் நம்மூர் செல்லும் நினைவுடன் அடைந் திருக்கின்றனை.

தோற்றிய செய்குறியாகிய வட்டத்தினை நாள்தோறும் எண்ணியவளாக, அவற்றை எழுதிய சுவரினை நினைந்தாளாக, அழுது சொரியும் அவளின் குளிர்ந்த கண்களிலிருந்து விலகி விழுகின்ற நீர்த்துளிகள், அவளுடைய பொற்குழைகளின் மீதே தெறித்துவிழுந்து கொண்டிருக்கும். திருந்திய அணியினையுடைய முன்கையினைத் தன் கவுளில் பொருந்தவைத்து, மலரணை மீது இருந்தவளாக, வருத்தமுறும் தன் தோள்களின் வருத்தத்தைப் போக்கும் மருந்து என எம்மையே நினைவாள். அங்ஙனம் அவள் நினையுந்தோறும், ஒலிக்கின்ற பல்லியானது, புள் நிமித்தத்தினைப் பரவியிருக்கும் அவளுடைய காதினிடத்தே, எம் வரவினையும் அறிவுறுத்துமோ?

சொற்பொருள்: 1. உறையுள் தங்கியிருத்தல், பேணி மேற்கொண்டு 2. பெறலருங் கேளிர் - பெறுதற்கரிய சுற்றத்தினர். விடுப்ப வழியனுப்ப, 3 அகப்படுத்த தேடிக் கைக்கொள்ள புகல் விருப்பம். 4. குறைவினை - குறையாகிய செய்வினை. 6. கழல் இலை கழன்று வீழும் இலைகள். 7. அகைந்தன்ன - கொழுந்து விட்ட எரிந்தாற்போன்ற, 9. மறுதரல் - மீண்டு வரல் 10. செய்குறி ஆழி செய்யுங் குறியாகிய ஆழி என்க. 11. சுவர் நினைத்த சுவரினை நினைந்த சுவரில் விளங்கும் வட்டங்களின் மிகுதியை நினைந்த நனைந்த எனவும் பாடம் 12. விலங்கி குறுக்காக விடுபட்டு, அரிப்பனி - மெல்லிய கண்ணீர்த் துளிகள், 13 அணல் - கவுள்; கன்னம். 15. தோட்பூசல் - தோளின் நலிதலாகிய காமநோய்.

விளக்கம்: 'தோள் நலிவுக்கு மருந்தாகத் தலைவனின் அணைப்பினை என்று பெறுவோம்? எனக் கவலையுற்றுப் புள் நிமித்தத்தை வேண்டியிருக்கும் தலைவிக்குக் கேட்குமாறு, ஒலிக்கும் பல்லியின் செயல், தான் திரும்பி வந்து கொண்டிருப் பதான செய்தியினை அவளுக்கு அறிவுறுத்துமோ?’ என எண்ணுகின்றான் அவன். கழலிலை புகுத்த கால்பொரு தாழ்சினை அழல் அகைந்தன்ன அங்குழைப் பொதும்பில், புழல்வீ இருப்பைப் புன்கான் அத்தம், மறுதரல் உள்ளமொடு குறுக’ என்றது, கோடை நீங்கிக் கார்காலத் தொடக்கமும் வந்துற்றதனைக் கூறியதாம் அதனால், தான் திரும்புங்காலம் வந்ததெனத் தலைவி தன்னை எதிர்நோக்கியவளாக ஏக்கமுற்றிருப் பாள் எனக் கருதுகின்றான் அவன்.