பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

அகநானூறு - நித்திலக் கோவை


பெற்றது. இதனால் தலைவனும் திரும்புவானாயினன் என்பதனைப் பின்வரும் அடிகள் உணர்த்துகின்றன.

‘புலவர் புகழ் குறிகொண்ட பொலந்தார் அகலம்' எனப், புலவர் போற்றும் புகழ்க்கு உரியதான விழுப்புண் பெற்ற சிறப்பினையும் உரைத்தனர். இதனால், தலைவனின் பேராண்மையும் உணர்த்தப் பெற்றது.

வெற்றி வீரனான இவன் தன் மனையிடத்துப் புகுதலை விரும்பிய போது, இவனில்லாத பிரிவால் இவன் தலைவியின் நெற்றியிடத்தைக் கவர்ந்துகொண்டு தங்கியிருந்த பசலை இனி எங்குச் சென்று வாழுமோ?’ என்று உரைக்கின்ற நயத்தினை அறிந்து இன்புறுக அவள் பசலை நீங்கும்; அவள் இன்பத்திலே திளைப்பாள் என்பதும் இதனால் கூறப்பெற்றது.

355. புலந்தேமாய் வருவோம்!

பாடியவர்: தங்கால் பொற்கொல்லனார். தங்கால் முடக் கொற்றனார் எனவும், தங்கால் முடக்கோவனார் எனவும் வழங்கப்படும். திணை: பாலை. துறை: பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

(தலைவன் ஒருவன், வாழ்க்கைக்குப் பொருள் வேண்டுமென்கின்ற நியதியை உணர்ந்து,அதனைச் சென்று தேடி வரும் உள்ளத்தினன் ஆகி, அதற்கான ஏற்பாடுகளிலேயும் முனைகின்றான். நின்னைப் பிரியேன்” என்று பலகாலும் கூறித் தெளி வித்த தலைவியிடம், 'பிரிகின்றேன்’ என்று சொல்லுவதற்கு இயலாதவனாகத் தலைவியின் தோழியிடத்தே செய்தியை அறிவிக்கின்றான். அவள், அதனைத் தலைவிக்கு அறிவிக்க, அவள் உள்ளம் குமுறுகின்றவளாக இங்ஙனம் உரைக்கின்றனள்.

மாவும் வண்தளிர் ஈன்றன குயிலும்
இன்தீம் பல்குரல் கொம்பர் நுவலும்
மூதிலை ஒழித்த போதுஅவிழ் பெருஞ்சினை
வல்லோன் தைவரும் வள்ளுயிர்ப் பாலை
நரம்புஆர்த் தன்ன வண்டினம் முரலும் 5

துணிகயம் துன்னிய தூமணல் எக்கர்த்
தாதுஉகு தண்பொழில் அல்கிக் காதலர்
செழுமனை மறக்கும் செவ்விவேனில்
தானே வந்தன்று ஆயின் ஆனாது
இலங்குவளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப் 10

புலந்தனம் வருகம் சென்மோ - தோழி!
'யாமே எமியம் ஆக நீயே