பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

அகநானூறு - நித்திலக் கோவை


கூறியது. சிறப்பு: நன்னன் பறம்பின் சிறப்பு: சோழர் மருகனான வல்லம் கிழவோனைப் பற்றிய செய்தி.

(தலைமகன் ஒருவன் தன் தலைவியை விட்டுப் பரத்தை யொருத்திபால் காமுற்றுத் திரிந்தனன். பின்னர்த் திரும்பி வந்து தன் தலைவியின் உறவை நாட, அவளோ ஊடி ஒதுங்குகின்றனள், அப்போது, தோழி அவனுக்கு அருளும்படியாகத் தலைவியின் உள்ளத்திலே பழைய நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தியவளாக, இவ்வாறு கூறுகின்றனள்.)

மேல்துறைக் கொளீஇய கழாலின் கீழ்த்துறை
உகுவார் அருந்தப் பகுவாய் யாமை
கம்புள் இயவன் ஆக விசிபிணித்
தெண்கண் கிணையின் பிறழும் ஊரன்

இடைநெடுந் தெருவிற் கதுமெனக் கண்டென்
5


பொற்றொடி முன்கை பற்றின னாக
"அன்னாய்! என்றனென் அவன்கைவிட் டனனே
தொன்னசை சாலாமை நன்னன் பறம்பில்
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய
கற்போல் நாவினே னாகி மற்றது 10

செப்பலென் மன்னால் யாய்க்கே நல்தேர்க்
கடும்பகட்டு யானைச்சோழர் மருகன்
நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
நல்லடி உள்ளா னாகவும் ஒல்லார்
கதுவ முயறலும் முயல்ப அதா அன்று 15

ஒலிபல் கூந்தல் நம்வயின் அருளாது
கொன்றனன் ஆயினும் கொலைபழுது அன்றே
அருவி ஆம்பல் கலித்த முன்துறை
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
மின்னிர் ஓதி! - என்னைநின் குறிப்பே? 20

அருவிநீர் வீழ்ந்து கொண்டிருக்கும் நீர்த்துறையின் முன் பக்கத்தே, ஆம்பற்பூக்கள் தழைத்திருக்கும் நன்னனது அழகிய பிரம்பு மலையினைப் போன்று? ஒளி மின்னுகின்ற கருமையான கூந்தலை உடையவளே!

மேற்றுறையிடத்தே, கள்ளினைக்கொண்ட கலங்களைக் கழுவுதலினால், கீழ்த்துறையிலே ஒழுகிவரும் நீரினை அருந்தப் பிளந்த வாயினையுடைய யாமையானது, சம்பங்கோழி இயக்கும் வாச்சியக்காரனாக விளங்க, இறுகப் பிணித்த தெளிந்த கண்ணினையுடைய கிணைப்பறையினைப் போலப் பிறழ்ந்து கொண்டிருக்கும் ஊரினையுடையவன் நம் தலைவன்.