பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

அகநானூறு - நித்திலக் கோவை


காரோடன் அரக்கோடு சேர்த்த கல்லானது, பின்னர் அதனின்றும் பெயராததுபோலவே, தலைவியும் வன்மை யமைந்த நாவினளாகி நிகழ்ந்ததனைத் தாய்க்கு உரையாளாய், அவன்பால் தானும் காதலுற்றாளாக, அதனை மறைத்தனள் என்பதனால், அவள் உள்ளத்தே நிலவும் காதலைத் தான் அறிந்ததனைக் கூறி, அவளைத் தெளிவிக்க முயலுகின்றாள் தோழி.

'நல்லடி உள்ளானாகவும் ஒன்னார் கதுவ முயறலும் முயல்வ' என்றது, தலைவியின் தாளினைப்பற்றி வேண்டிக் கொள்ளுதற்கு அவன் நினையானாயினும், பகைவரைக் கைப்பற்ற வல்லவன் என, அவனது ஆண்மையினையும் அவனுடைய ஆற்றலினையும் உரைத்ததுமாம். @அருளாது கொன்றனன்’ என்றது, அருள் செய்தலில்லாது, நம் ஆர்வத்தையும் எழிலையும் அழித்தனன் எனினும் ஆம். அது பழுது அன்று ஆயது, அவன் வந்து அப்போது இரந்து நிற்றலால் என்க. நல்லடி நன்மையும் ஆம்

357. நினையாது இருப்பார் அல்லர்!

பாடியவர்: எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார். திணை: பாலை துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. சிறப்பு: உம்பற்காடு பற்றிய செய்தி.

தலைவன் ஒருவன், தன்னுடைய தலைவியைப் பிரிந்தவனாகப் பொருள்தேடி வருகின்றதன் பொருட்டாக, வேற்று நாட்டிற்குச் சென்றுள்ளனன். அவனைப் பிரிந்து வாழும் தனிமை வாழ்வினாலே, அவள் கொண்ட வேதனை நாளுக்கு நாள் மிகுதியாயிற்று. உள்ளத்தின் இடையறாத நலிவினாலே உடல் நலமும் சிதையத் தொடங்கிற்று. அவளுடைய நிலைக்கு இரங்கிய அவளுடைய தோழி, தலைவனின் தளராத அன்புடைமையைக் கூறித், தலைவிக்கு ஆறுதல்கூற முற்படுகின்றனள். இத் துறையிலே அமைந்த செய்யுள் இது)

          கொடுமுள் ஈங்கைச் சூரலொடு மிடைந்த
          வான்முகை இறும்பின் வயவொடு வதிந்த
          உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய
          தடமருப்பு யானை வலம்படத் தொலைச்சி
          வியலறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து 5

          புலவுப்புலி புரண்ட புல்சாய் சிறுநெறி
          பயில்இருங் கானத்து வழங்கல் செல்லாது
          பெருங்களிற்று இனநிரை கைதொடூஉப் பெயரும்