பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 135


தீஞ்சுளைப் பலவின் தொழுதி உம்பற்
பெருங்காடு இறந்தனர் ஆயினும் யாழநின் 10

திருந்திழைப் பனைத்தோள் வருந்த நீடி
உள்ளாது அமைதலோ இலரே நல்குவர்
மிகுபெயல் நிலைஇய தீநீர்ப் பொய்கை
அடைஇறந்து அவிழ்ந்த தண்கமழ் நீலம்
காலொடு துயல்வந் தன்னநின் 15

ஆய்இதழ் மழைக்கண் அமர்த்த நோக்கே.

தோழி! வளைவான முட்களையுடையது ஈங்கைச் செடி. அது பிரப்பங்கொடியுடன் பின்னிக் கிடக்கும். வெண்மையான அரும்புகள் விளங்கும் குறுங்காடு அத் தன்மைத்து. அதனிடத்துச் சூல் முதிர்ச்சியுள்ள பெண்புலி ஒன்று தளர்ந்து உணவற்றுக் கிடக்க, அதன் துயரினைத் தீர்ப்பதற்கு எழுந்தது அதனுடைய ஆண். பெரிதான கோட்டினையுடைய யானை யொன்றை வலப்புறம் வீழுமாறு அது கொன்றது. அகன்ற பாறைகள் எம்மருங்கும் செந்நிறங் கொள்ளும்படியாக, அந்த யானையின் ஊனைக் கவ்வி இழுத்தவாறு கொணர்ந்து, தன் துணையை உண்பித்தது. அதன்பின்னர்ப் புலால் நாற்றமுடைய அது, மூரித்து நிமிர்ந்ததாகப் புற்களிடையே கிடந்து புரள, அதனாற் புற்கள் சாய்ந்து கிடக்கும் கள் மிகுதியுள்ளது காடு, பெரிய களிற்றின் கூட்டமாகிய நிரையும் அவ்விடத்தே இயங்குதலைப் பொருந்தாதாய் ஒன்றன் கையால் மற்றொன்றைத் தொட்டவாறு விழிப்புடன் செல்லும். இனிய சுளைகளை யுடைய பலாமரத்தின் கூட்டத்தையுடைய, அத்தகைய, பெரிதான உம்பற்காட்டினை நம் தலைவர் கடந்து சென்றவராயினும்-

நின்னுடைய திருத்தமுற அணிந்த அணிகளையுடைய பெருத்த தோள்கள் வருந்தி அழகிழந்து போமாறு காலத்தை நீட்டிப்பவர் அல்லர்.

மிகுதியான மழையினாலே நிலைபெற்ற பெருக்கத்தினை யுடைய பொய்கையினிடத்தே, இலைகளைவிட்டு மேலாக எழுந்து மலர்ந்துள்ள தண்மையான மணம் வீசும் நீலப்பூவானது காற்றினாலே அசைந்தாற்போன்ற, நின்னுடைய அழகிய இதழ் பொருந்திய குளிர்ச்சியான கண்களின் அமர்த்த நோக்கினை, அருளுண்டாக நினையாது அமைந்திருத்தலும் அவர் இலராவர்.

சொற்பொருள்: 1. கொடுமுள் - வளைந்தமுள் ஈங்கை ஈங்கைச் செடி இசங்கு என்பர் நெல்லை வட்டத்தினர். சூரல் -


10