பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 139


(தலைவன் ஒருவன் தன் அன்புறு தலைவியைப் பிரிந்தவனாகப் பொருளீட்டி வருதலைக் குறித்து வேற்று நாட்டிற்குச் சென்றுள்ளனன். அவள், அவனை நினைந்து நினைந்து நாளும் வருத்தமுற்று வாடி நலிகின்றாள். அவளுடைய வாட்டத்தினைக் கண்டனள் அவளுடைய ஆருயிர்த் தோழி. தலைவியின் வருத்தத்தை மாற்றுவாளாக இவ்வாறு கூறுகின்றனள்.)

பனிவார் உண்கணும் பசந்த தோளும்
நனிபிறர் அறியச் சாஅய நாளும்
கரந்தனம் உறையும் நம்பண்பு அறியார்
நீடினர் மன்னோ காதலர்’ எனநீ

எவன்கை யற்றனை? - இகுளை!-அவரே
5


வான வரம்பன் வெளியத்து அன்னநம்
மாணலம் தம்மொடு கொண்டனர் - முனாஅது
அருஞ்சுரக் கவலை அசைஇய கோடியர்
பெருங்கல் மீமிசை இயம்எழுந் தாங்கு

வீழ்பிடி கெடுத்த நெடுந்தாள் யானை
10


சூர்புகல் அடுக்கத்து மழைமாறு முழங்கும்
பொய்யா நல்லிசை மாவண் புல்லி
கவைக்கதிர் வரகின் யாணர்ப் பைந்தாள்
முதைச்சுவல் மூழ்கிய கான்சுடு குரூஉப்புகை

அருவித் துவலையொடு மயங்கும்
15


பெருவரை அத்தம் இயங்கி யோரே!

தோழி! “கண்ணீர் ஒழுகும் மையுண்ட கண்களும், பசலை படர்ந்த தோள்களும், நாளுக்கு நாள் வாடுதலுற்றுப், பிறர் நின் நோயை அறியும்படியாக மிகினும், நாடோறும் அவற்றை மறைத்து வாழும் நம் பண்பினை நம் காதலர் அறியாராயினர் மீண்டு வருதலில் காலமும் தாழ்த்தினா என்று, நீ ஏனோ செயலிழந்தவள் ஆயினை”

முன்பக்கத்தேயுள்ள அரிய சுரத்தின் கவர்த்த நெறிகளில் தங்கிய கூத்தரது வாத்திய ஒலியானது, பெருமலையின் மேலிடத்தே எதிரொலித்து எழும், அதுபோலவே, தன்னால் விரும்பப்படும் பிடியினைக் கெட்டுப்போக்கிய நெடியகால்களையுடைய களிற்றியானையானது. தெய்வங்கள் விரும்பித்தங்கும் மலையடுக்கத்தே இடியோடு மாறுட்டதாக முழங்கிக் கொண்டிருக்கும். அத்தகைய மலைநாட்டையுடையவன், பெரு வண்மையும், பொய்த்தல் அற்ற நல்ல புகழும் உடையோனாகிய புல்லி என்பவன். அவனது, கவைத்த கதிர்களையுடையவரகின் புதிய பசுந்தாள்களையுடைய பழங்கொல்லையாகிய மேட்டு