பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

அகநானுறு - நித்திலக் கோவை


வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து உருவுடன் இயைந்த தோற்றம் போல
அந்தி வானமொடு கடலணி கொளாஅ
வந்த மாலை பெயரின் மற்றிவள்

பெரும்புலம் பினளே தெய்ய அதனால்
10


பாணி பிழையா மாண்வினைக் கலிமா
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி
நெடுந்தேர் அகல நீக்கிப் பையெனக்
குன்றுஇழி களிற்றின் குவவுமணல் நந்தி

இரவின் வம்மோ - உரவுநீர்ச் சேர்ப்ப! -
15


இனமீன் அருந்து நாரையொடு பனைமிசை
அன்றில் சேக்கும் முன்றிற் பொன்னென
நன்மலர் நறுவி தாஅம்
புன்னை நறும்பொழில் செய்தநம் குறியே

வலிய கடற்கரைக்கு உரியவனான, சேர்ப்பனே!
20

பலவாகிய பூக்களையுடைய குளிர்ச்சியான பொழிலினிடத்தே பகற்போதெல்லாம் தலைவியுடனே கூடியிருந்து கழித்தனை. ஒற்றைச் சக்கரத்தினைக் கொண்ட தேரினை யுடையவன் ஞாயிறாகிய அழகிய செல்வன், அவன் மேற்றிசைக் கண்ணதாகிய பெரிய மலையிற்சென்று மறைந்தனன். வளைந்த கழியிலேயுள்ள தண்ணிய சேற்றிலே செறிந்துள்ள திரண்ட தண்டினையுடைய நெய்தற்பூவின் நுண்ணிய தாதினை உண்ட வண்டினங்களும் அதனைவிட்டு நீங்கின. அஞ்சத்தகும், மிக்க வலிமையினையுடைய இரண்டு பெருந் தெய்வங்களான சிவமும் சக்தியும், ஒர் உருவத்தே உடன் பொருந்திச் சிவசக்தியாக விளங்குகின்ற தோற்றத்தைப் போல, அந்திச் செவ்வானத்துடன் நீலக்கடலும் இணைந்து அழகு கொண்டது, இங்ஙனமாக வந்த மாலைக் காலத்திலே, நீயும் நீங்கிச் சென்றனையானால், இவள் பெரிதும் தனிமை கொண்டவளாகி வருந்துவாள்.

அதனால், தாளத்தையொத்து நடத்தலினின்றும் பிழைபடாத மாண்புற்ற, செல்லுந்தொழிலிலே வல்ல செருக்குடைய குதிரையானது, ஊர் துயிலும் யாமத்தினும் கனைத்தலைப் பாதுகாத்து, நெடிய நின் தேரினைச் சேய்மையிடத்தேயே நீக்கி நிறுத்தி, மெல்லெனக் குன்றிடத்திருந்து இறங்கிச் செல்லும் களிற்றியானையினைப் போலத் திரண்ட மணல்மேட்டினைக் கடந்து வருக.

மீனினங்களை அருந்தும் நாரையொடு பனைமரத்தின் மேல் அன்றில்களும் தங்கியிருக்கும் மனையின் முற்றத்திலே