பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

அகநானூறு -நித்திலக் கோவை


(தலைவன் வினைமேற்கொண்டு பிரிந்து சென்றனனாக. அவ்வருத்தந் தாளாதவளாகித் தலைவி மிகவும் வாட்டமுற்று நலிவுற்றிருக்கின்றனள். அவன் வருவதாகக் குறித்துச் சென்ற காலத்தின வரவு, அந்த வருத்தத்தையும் வாட்டத்தையும் மிகுதியாக்குகின்றது அவ்வேளை,அவளுக்குத் தேறுதல் கூறி வருகின்றனள் தோழி, அப்போது தலைவனும் வினைமுடித்தவனாக வீடு வந்து சேர்கின்றனன். இந்தக் கருத்தமைய அமைந்த செய்யுள் இது.)

நிறைசெலல் இவுளி விரைவுடன் கடைஇ
அகலிரு விசும்பிற் பகல்செலக் சென்று
மழுகுசுடர் மண்டிலம் மாமலை மறைய
பொழுதுகழி மலரிற் புனையிழை சாஅய்!

அணை அணைந்து இனையை ஆகல் சுணையரைப்
5


புல்லிலை நெல்லிப் புகளில் பசுங்காய்
கல்லதர் மருங்கில் கடுவளி உதிர்ப்ப
பொலஞ்செய் காசிற் பொற்பத் தாஅம்
அத்தம் நண்ணி அதர்பார்த் திருந்த

கொலைவெங் கொள்கைக் கொடுந்தொழில் மறவர்
10


ஆறுசெல் மாக்கள் அருநிறத்து எறிந்த
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய
வளைவாய்ப் பருந்தின் வள்ளுகிர்ச் சேவல்
கிளைதரு தெள்விளி கெழுமுடைப் பயிரும்

இன்னா வெஞ்சுரம் இறந்தோர் முன்னிய
15


செய்வினை வலத்தர் ஆகி இவணயந்து
எய்தவந் தனரே! தோழி மையெழில
துணையேர் எதிர்மலர் உண்கண்
பிணையேர் நோக்கம் பெருங்கவின் கெளவே.

தோழி!
20

திரண்ட அரைவினையும் சிறிய இலையினையும் உடையது நெல்லிமரம். அதன் வடுவற்ற பசிய காய்களைக் கடுங்காற்று உதிர்ப்ப, அவை, கற்களையுடைய நெறிகளிடத்தே, பொன்னாற் செய்யப்பெற்ற காசுகளைப்போல அழகுறப் பரந்துகிடக்கும்; கொலையாகிய வெம்மையான கோட்பாட்டினை உடையவர் கொடுந்தொழிலோரான மறவர்கள். அவர்கள், காட்டுப் புறத்தை அடைந்து, ஆறலைப்பதனைக் கருதியவராக, வழிவருவாரைப் பார்த்தவாறு இருப்பர். அவ்வழியே செல்லும் வணிக மாக்களின் அரிய மார்பிலே வேலினால் எறிந்து அவர்களைக் கொல்வர். அவ் வேல்பாய்ந்த பெரும் புண்களை உடையோரை, வளைந்த வாயினையும் கூர்மையான நகத்தினையும் உடைய பருந்தின்