பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★153


 பசிய தோற்றத்துடன், 3. சினவல் - சினம் 5 கதுவாய் - சிரைவுற்ற. 6. இதக்கை-நுங்கின் தோடு,9 என்றுழ் - வெப்பம்.13. பூதம் தந்த - பூதமானது வழங்கிய.

விளக்கம்: 'நடுகல்லினை ஆளெனக் கருதி உதைத்துக் கால் நகம் பெயர்ந்த யானை வழங்கும் நெறியென்றது, காட்டின் கடுமையைக் குறித்ததாம். 'கடுங்கண் ஆடவர் களையுநர் காணா என்றுழ் வெஞ்சுரம்' என்றது, காட்டின் வெப்பத்தையும், அதன்கண் செல்வார்க்கு நேர்கின்ற துயரத்தினையும் குறிப்பதாம். பூதம் தந்த வேங்கை' எனவே, பூதங்களை வேட்டு வழிபடும் வழக்கமும், அவை உதவுமென்ற கருத்தும் அந்நாளிற் கொள்ளப்பெற்றிருந்த தன்மையினை அறியலாம். காட்டின் வெம்மையைக் கருதாத நெஞ்சம், காதலியின் பிரிவினைக் கருதி வழியிடை வருத்த, இங்ஙனம் உரைத்து, அவன் மீண்டும் தன்வினைமேற் செல்லாயினன் என்று கொள்ளுதல் வேண்டும்.

366. கலுழ்ந்த கண்ணள்!

பாடியவர்: குடவாயிற் கீரத்தனார். திணை: மருதம். துறை: பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் வாயில் வேண்டிய விடத்துத் தோழி சொல்லியது.

(தலைமகன் ஒருவன், தன் தலைவியைப் பிரிந்து பரத்தை ஒருத்தியுடன் தொடர்பு கொண்டிருந்தனன். அவன், மீண்டும் தன் தலைவியின் உறவை நாடுகின்றான். அவளிடம் நேரடியாகச் செல்லுவதற்கு நாணி அவன், தோழியின் உதவியை நாட, அவள் இவ்வாறு கூறி அவனுக்குத் தலைவியை இசைவிக்க மறுக்கின்றாள்.)

தாழ்சினை மருதம் தகைபெறக் கவினிய
நீர்சூழ் வியன்களம் பொலியப் போர்ப்பழித்துக்
கள்ளார் களமர் பகடுதளை மாற்றி
கடுங்காற்று எறியப் போகிய துரும்புடன்

காயற் சிறுதடிக் கண்கெடப் பாய்தலின்
5


இருநீர்ப் பரப்பின் பனித்துறைப் பரதவர்
தீம்பொழி வெள்ளுப்புச் சிதைதலின் சினைஇக்
கழனி உழவரொடு மாறுஎதிர்ந்து மயங்கி
இருஞ்சேற்று அள்ளல் எறிசெருக் கண்டு

 நரைமூ தாளர் கைபிணி விடுத்து
10


நனைமுதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம்பூண் எவ்வி நீழல் அன்ன
நலம்பெறு பணைத்தோள் நன்னுதல் அரிவையொடு