பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

அகநானூறு -நித்திலக் கோவை


மணங்கமழ்

தண்பொழில் அல்கி நெருநை நீதற் பிழைத்தமை அறிந்து
15

கலுழ்ந்த கண்ணளெம் அணங்கன் னாளே.

தலைவனே!

தாழ்ந்த கிளைகளையுடைய மருதமரங்கள் தகைமைபெற அழகு செய்திருக்கும், நீராற் சூழ்ந்திருக்கப்பெற்ற அகன்றகள மானது பொலிவுறப், போரினைப் பிரித்துக் கடாவிட்டுப்பின் கள்ளுண்டு வருபவர் களமர்கள். வந்தவர்கள், பகடுகளைப் பூட்டவிழ்த்து விட்டவராகக் கடிய காற்றிலே நெல்லினைத் தூற்றுவர். காற்றுடன் போகிய துரும்பு முழுவதும் சென்று, உப்பளத்திலேயுள்ள சிறிய பாத்திகளில் இடமில்லையாம்படி நிறைக்கும். அதனால், இனிமை மிகுந்த வெண்மையான உப்புங் கெடும். அதனால் பெரிய கடற்பரப்பின் குளிர்ந்த துறையிடத்து உள்ளவரான பரதவர்கள் சினங்கொள்வர். இருசாராரும் தம்முட் கலந்து சேற்றுக்குழம்பினை வாரியிறைத்துப்போரிடுவர். அதனைக் கண்ட நரைத்த முதியோர்கள், அவர்களின் கைபிணித்துச் செய்யும் போரினை விலக்குவர். முற்றிய தேனாகிய கள்ளின் தெளிவினைப் பரதவர்க்கு அளித்து, அவரை அனுப்பி வைப்பர்.

அத்தகைய இடமாகிய,

பொற்பூண் அணிந்த எவ்வி என்பானுக்கு உரிய நீழல் என்னும் ஊரினைப் போன்ற, நன்மை பொருந்திய பணைத்த தோள்களையுடையவளும், நறிய நெற்றியினையுடையவளுமான பரத்தையொடு, மணம்கமழும் தண்ணிய பொழிலிலே நேற்றுத் தங்கியிருந்தனை. அங்ஙனம், நீ தனக்குத் தீங்கு செய்தமையினை, அணங்கு போல்வாளாகிய எம் தலைவியும் அறிந்தனள். அதனால், கலங்கியழுத கண்களை உடையவளும் ஆயினள். (அவள் எங்ஙனம் நினக்கு இசைவாள்? என்பது முடிபு.

சொற்பொருள்: 1. தாழ் சினை- தாழ்ந்து கிடக்கும் கிளைகள். 2. போர் அழித்து - போரினை அவிழ்த்துச் சூடடித்து. 3. கள் ஆர் களமர் - கள் உண்ணும் உழவர். 5 சிறு தடி - சிறிய உப்புப் பாத்திகள். 7. தீம்பொழி - இனிமை மிக்க 9. இருஞ் சேறு - கரிய சேறு.

விளக்கம்: உப்புப் பாத்திகளில் நெல்லைத் தூற்றுவாரின் தூசு சென்று படிதல் என்றதனால், எவ்வியின் நீழல்நகர் நெல்வளமும் கடல்வளமும் உடைத்தாயிருந்தது என்க. நரைமுதாளர் களமரும் நுளையரும் இட்டசெருவினை விலக்கி,