பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 155


நுளையருக்குக் கள்ளருத்தி, அவர் சினத்தைத் தணிவித்தனர் என்க. நீழல் என்பது, நீடூர்' எனவும் வழங்கும்.

367. மாலையும் இனிது!

பாடியவர்: பரணர். திணை: பாலை, துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகள், வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.

(தலைவன் பிரிந்து சென்றிருந்தனனாக. அவனுடைய மனைவி அந்தப் பிரிவின் வேதனையினைத் தாங்க மாட்டாதவளாக வாடி நலிவுற்றிருக்கின்றனள். அவளுடைய கவலையும் வாட்டமும் அவளுடைய தோழிக்கு மிகுந்த மனவேதனையைத் தருகின்றது; அவள் தலைவிக்கு ஆறுதல்கூறி அவளுடைய வாட்டத்தைப் போக்குவதற்கு முயலுகின்றாள். அப்போது, தலைவி, தோழிக்குத் தன்னுடைய நிலைமையினைக் கூறுகிற முறையிலே அமைந்தது இந்தச் செய்யுள்.)

இலங்குசுடர் மண்டிலம் புலந்தலைப் பெயர்ந்து
பல்கதிர் மழுகிய கல்சேர் அமையத்து
அலந்தலை மூதேறு ஆண்குரல்விளிப்ப
மனைவளர் நொச்சி மாசேர்பு வதிய

முனையுழை இருந்த அம்குடிச் சீறுார்க்
5

கருங்கால் வேங்கைச் செஞ்சுவல் வரகின்
மிகுபதம் நிறைந்த தொகுகூட்டு ஒருசிறைக்
குவியடி வெருகின் பைங்கண் ஏற்றை
ஊன்நசைப் பிணவின் உயங்குபசி களை இயர்

தளிர்புரை கொடிற்றின் செறிமயிர் எருத்திற்
10

கதிர்த்த சென்னிக் கவிர்ப்பூ அன்ன
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும் இனிது மன்றம்ம
நல்லக வனமுலை அடையப் புல்லுதொறும்

உயிர் குழைப் பன்ன சாயற்
15

செயிர்தீர் இன்துணைப் புணர்ந்திசி னோர்க்கே.

தோழி! விளங்கும் ஒளியினையுடைய ஞாயிற்று மண்டிலமானது வானிடத்தின்றும் பெயர்ந்து, தன் பலவாகிய கதிர்களும் மழுங்குதலுற்று, மலையினைச் சேருகின்றதான பொழுதிலே,

கலக்கமுற்ற கிழட்டு எருதானது, தன்ஆண் குரல் தோன்றக் கூப்பிட, மனையைச் சூழ வளர்ந்திருக்கும் நொச்சியிடத்தே