பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

அகநானூறு -நித்திலக் கோவை


மான்கள் சேர்ந்து தங்கியிருக்கக் காட்டரணின் அருகாமையிலே இருந்த அழகிய குடியிருப்பினையுடைய சிற்றூரினிடத்தே, கருத்த அடியினைக்கொண்ட வேங்கைவிளங்கும் சிவந்த மேட்டு நிலத்தே விளைந்த வரகினது, மிக்க தானியம் நிறைந்துள்ள தொகுகூட்டின் ஒரு பக்கத்தே, குவிந்த அடியினையும் பசிய கண்களையுமுடைய காட்டுப்பூனை வருத்தும் பசியினைப் போக்கும்படியாகத், தளிர்போன்ற கன்னத்தினையும் மயிர் செறிந்த கழுத்தினையும்,நிமிர்த்தலையிடத்தே முருக்கம் பூவினை யொத்த சூட்டினையும் உடைய, கோழிச் சேவலைப் பற்றும் சமயத்தினை எதிர்பார்த்திருக்கும். பொலிவற்ற அத்தகைய மாலைப்பொழுதும்,

நல்ல மார்பிடத்தேயுள்ள, அழகிய தம்முலைகள் அழுங்கத் தழுவுந்தோறும், உயிர் குழைவதுபோலும் சாயலைக்கொண்ட இனிதான துணைவருடன் கூடியிருப்பவர்கட்கு இனிதாகவே இருக்கும். (ஆயின், நமக்கு இனிதாகாது என்பது கருத்து.)

சொற்பொருள்: 1. புலம் தலைபெயர்ந்து - வானிடத்தை விட்டு நீங்கியதாகி 2 மழுகிய - மழுங்கிப் போகிய, 3 அலந்தலை மூதேறு - கலக்கமுற்ற கிழட்டு எருது. ஆண்குரல் - ஆண்மைக் குரல் 4. மாசேர்பு - மான்கள் சேர்ந்து. 5. முனையுழை காட்டரணின் அருகே முழையுழை எனவும் பாடம் 7. தொகுகூடு - தொகை பெற்று விளங்கும் தானியக் கூடுகள், குதிர் என்பர்; சேர் எனவும் கூறுவர்.10.கொடிற்றின் - கன்னத்தினையும். எருத்து - கழுத்து.1. கவிர்ப்பூ முருக்கம்பூ.12அற்றம் பார்த்தல்-செயலை முடிப்பதற்கான சமயத்தை எதிர்நோக்கி யிருத்தல்.14. நல்லகம் - நல்ல மார்பகம்; நன்மை, மார்பகத்தின் வனப்பினைக் குறித்தது. அடைய - பொருந்த 16 செயிர் - குற்றம்.

விளக்கம்: மாலைக் காலத்திலே அலந்தலை மூதேறும் ஆண்குரல் விளிக்கும் என்றதனைச் சிந்திக்கவும் அலந்தலை’ என்றது, அதுவும் மாலையின் வரவினாலே துணையினை நாடிக் கலக்கமுற்றுத், தன் ஆண்குரல் தோன்றக் கூப்பிடும் என்றனர். 'மனைவளர் நொச்சி மாசேர்ப்பு வதிய’ என்றது, மாலையின் வரவினாலே காட்டு விலங்குகட்கு அஞ்சிய மானினம், பெண்கள் தம்பால் அன்பு காட்டுவர் என்ற உறுதியுடன், மனையை அடுத்த நொச்சி வளர்ந்த இடங்களிலே பதுங்கி யிருக்கும் என்க. 'தொகுகூடு என்றது, தானியங்களைச் சேமித்து வைக்கும் கூடுபோன்ற சேமிப்பு வசதியினை. இவ்வாறு, தானியங்களைச் சேமித்து வைப்பது இந்நாளினும் வழக்கமாகும். 'வெருகு' காட்டுப்பூனை இன்றும் தென்னகத்தார் இந்தப் பெயராலேயே இதனை வழங்குவர், உயிர் குழைப்பன்ன சாயல்