பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

அகநானூறு -நித்திலக் கோவை


தோழி வாழ்க!

தன் காலிற் செருப்பணிகின்றவன் கானவன். அவன் சுட்டெரித்த அகன்ற தினைக்கொல்லையிலே, கரிந்துபோன இடங்களை மிக்க பெயலாகிய மழை கழுவிச் செல்லும். அப்படிக் கழுவிச் சென்ற ஈரத்திலே, இதழ்கள் வளர்ந்த பசிய தினைப்பயிர் விளங்கும். அதன் நீண்ட கதிர்களை ஒள்ளிய தொடியணிந்த மகளிர்கள் காத்திருப்பர். அவர்கட்கு ஊசல் ஆடுவதற்கு உதவிய அசையும் கிளைகளை ஒழித்துவிட்ட கொம்பிலே பூங்கொத்துக்கள் செறிவுற்று விளங்கும். அத்தகைய, குறுகிய பொறையின் அயலிடத்ததான, நெடிய அடியினையுடைய வேங்கை மரமானது, இளைய மயிலின் கொண்டையினைப் போலத் தோன்றும் நாட்டிற்கு உரியவன் நம் தலைவன்.

உயரிய மலையின் பக்கங்களிலேயுள்ள, காந்தள் மலர்கள் செறிந்த அழகிய சோலைக்கண்ணே, குரங்குகளும் அறிந் திருத்தல் அற்ற நீண்ட மரங்கள் செறிந்த மணியினைப் போன்ற இனிதான நீரிலே, பிடியுடன் கூடிய களிற்றினைப் போல, எம்மோடும் பலநாள் ஆடியவன் அவன். அவன், நம்மைப்பிரிந்து வேற்றுநாடு சென்று சில நாட்கள்கூடக் கழியாததன் முன்பாகவே, அந்தப் பிரிவுச்செய்தி முறையே பெருகலாயிற்று.

அழகிய மூங்கிற் குழாயிடத்தே விளைந்த இனிய தேனாகிய கள்ளின் தேறலை, வண்டுபடியும் கண்ணியினராக உண்டு மகிழ்பவரான நம் சிற்றுாராரினிடத்தே, பலர் வாயாலும் அது பேசப்படலுமாயிற்று. கொங்கக் கூத்தர் அரையிலே மணிகளைக் கட்டிக்கொண்டு தெருக்களிலே கூத்தாடும் உள்ளி விழாவினைப் போன்ற ஆரவாரத்துடன், அலரும் எங்கும் எழுகுகின்றது. இஃது என்னையோ?

சொற்பொருள்: 1. தொடுதோல் - செருப்பு கானவன் - குறவன்; கானத்து வாழ்வினை உடையவன். சூடுறுவியன் - புனம் சுடுதலைப்பெற்ற அகன்ற தினைப்புனம். 2. பெரும் பாடு - பெருமழை. 3. தோடு - இதழ் , தினையின் இலைக்குத் தோடு என்று பெயர். 5. களுலிய - செறிந்த 9. மரம்பயில் இறும்பு - மரஞ்செறிந்த காடு. 10. கடிசுனை - விளக்கம் பொருந்திய சுனை, காவலையுடைய சுனை எனினும், மணம் நிரம்பிய சுனை எனினும் ஆம்.

விளக்கம்: ஒண்டொடி மகளிர்க்கு ஊசல் ஆக ஆடுசினை யொழித்த கோடுஇணர் கஞலிய' என்றது. பெண்கள் ஊசலாடுமாறு விளங்கிய மரக்கிளைகள் மழைவரவினாலே பூத்துக் குலுங்கின என்க. இதனாற் புனம்கதிர் கொய்யப் பெற்றமையும்,